"மனசு வலிக்குது.." சமந்தாவுடன் விவாகரத்து குறித்து முதன் முறையாக வாய் திறந்த நாகசைதன்யா..!


நடிப்பு, மாடலிங், வெப் சீரிஸ் என தொடர்ந்து தன்னுடைய கேரியரில் பிஸியாக இருக்கும் சமந்தா, கடந்த சில மாதங்களாக தனி பட்ட வாழ்க்கையை குறித்தும், பல்வேறு வதந்திகளில் சிக்கி வருகிறார். 
 
அந்த வகையில் சமந்தா மும்பைக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், நாக சைதன்யா... சமந்தாவை பிரிந்து, தன்னுடைய தந்தையுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. 
 
சமந்தா - நாக சைதன்யா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தீர்த்து வைக்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சித்த போதிலும், அது தோல்வியடைந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
 
மேலும், பேமிலி மேன் 2 வெப்சீரிஸில் ஓவர் கிளாமராக நடித்ததால் தான் இந்த விவாகரத்து முடிவு ஏற்பட்டது என்று பலவேறு செய்திகள் இணையத்தில் வெளியாகின. 
 
 
ஆனால் இதுகுறித்து சமந்தா மற்றும் நாக சைத்தாயா வாய் திறக்காமல் இருப்பது மேலும் பல வதந்திகளுக்கு வழி வகுத்தது. இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது இது குறித்து முதல்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார் நாகசைதன்யா. 
 
அப்பேட்டியில், “திரைத்துறை வாழ்க்கை வேறு. தனிப்பட்ட வாழ்க்கை வேறு. இதை நான் சிறு வயதிலிருந்தே கடைபிடித்து வருகிறேன். இந்த பழக்கம் என்னுடைய அம்மா அப்பாவிடம் இருந்து எனக்கு வந்தது என்றார். அவர்கள் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்ததும் சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார்கள். 


அந்த நல்ல பழக்கத்தை நானும் கடைபிடித்து வருகிறேன் என்றார்.ஆனால், சமந்தாவுடன் விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு செய்தியையும் மறக்கடிக்க இன்னொரு செய்து உடனே வந்து விடுகிறது என்றார்.
 
இன்று ஒரு செய்தி பரபரப்பாக இருந்தால் நாளை இன்னொரு செய்தி பரபரப்பாக இருக்கிறது. இந்த புரிதல் எனக்குள் வந்தவுடன் நானும் இது குறித்து கவலைப்படுவதை நிறுத்தி விட்டேன்” என தெரிவித்துள்ளார்.

"மனசு வலிக்குது.." சமந்தாவுடன் விவாகரத்து குறித்து முதன் முறையாக வாய் திறந்த நாகசைதன்யா..! "மனசு வலிக்குது.." சமந்தாவுடன் விவாகரத்து குறித்து முதன் முறையாக வாய் திறந்த நாகசைதன்யா..! Reviewed by Tamizhakam on September 24, 2021 Rating: 5
Powered by Blogger.