பிக்பாஸ் சீசன் 5 : கம்ப்ளீட் போட்டியாளர்கள் பட்டியல்..!


பிக்பாஸ் தமிழ் சீசன் 5 இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் யார் யார் உள்ளே செல்ல உள்ளவர்களின் இறுதி பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ஏற்கனவே கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பல பிரபலங்களின் பெயர்கள் இல்லாதது பெருத்த ஏமாற்றம் என்றே கூறலாம். 
 
பிரபலங்களின் பொறுமை, புத்திசாலித்தனம், அவர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதம், நேர்மை உள்ளிட்ட பல்வேறு அடிப்படையில் மக்கள் மனதிலும், உள்ளே இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் மனதிலும் இடம்பிடித்து 100 நாட்கள் வெற்றிகரமாக உள்ளே இருப்பவர்களே, இறுதியாக மக்கள் வாக்குடன் வெற்றிவாகை சூடுகிறார்கள். 
 
வெளியில் இருந்து பார்ப்பதற்கு இது சாதாரணமாக தெரிந்தாலும்... அங்கு இருக்கும் சூழ்நிலை அவர்களை சில சமயங்களில் சர்ச்சைக்குரிய மனிதராக நம் கண் முன் நிறுத்திவிடுகிறது. எனவே தான் பல பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வரும் போது நெகடிவ் இமேஜூடன் வருகிறார்கள்.
 
முன்பில் இதே பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ள சில பிரபலங்கள் பற்றிய தகவல்கள் வெளியானாலும், பின்னர் அதில் உண்மை இல்லை என கூறப்பட்டது. சரி இப்போது வெளியாகியுள்ள பிக்பாஸ் பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க... 
 
1.இசைவாணி
2.ராஜு ஜெயமோகன்
3.மதுமிதா
4.அபிஷேக் ராஜன்
5.நமிதா மாரிமுத்து
6.பிரியங்கா தேஷ்பாண்டே
7.அபிநய் வட்டி
8.சின்ன பொண்ணு
9.பவானி ரெட்டி
10.நடியா சேங்
11.வருண்
12.இமாம் அண்ணாச்சி
13.லைக்கி பெர்ரி
14.ஸ்ருதி ஜெயதேவன்
15.தாமரை செல்வி
16.சிபி சந்திரன்
17.நிரூப் நந்தகுமார்