போட்டியாளர்கள் பட்டியல் - பிக்பாஸ் வரலாற்றில் முதன் முறையான இரண்டு "திருநங்கைகள்"..!


பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்று வரும் ஒரு நிகழ்ச்சியாகும். 
 
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசனும் வெற்றிகரமாக நிறைவுப்பெற்ற நிலையில், 5வது சீசனை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த போது, செப்டம்பரில் பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இன்னும் ஆர்வத்தை அதிகரித்தது. 
 
அதிலிருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்பட்டு தான் பிபி வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.
 
இந்நிலையில் ஷகிலாவின் மகள் மிலா பிக்பாஸ் வீட்டிலிருக்கும் இருக்கும்படி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கேமிராவுக்கு முத்தம் கொடுக்கும்படி போஸ் கொடுத்துள்ளார்.
 
பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே , பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முதல் திருநங்கை என்ற பெருமையை மிலா பெற்றுள்ளார்.மேலும் நமிதா மாரிமுத்து என்ற மற்றொரு திருநங்கையும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. 
 

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் கலந்துக்கொள்கிறார் என்று தெரிந்துக்கொள்ள இன்று மாலை 6 மணி வரை நாம் காத்திருக்க வேண்டும்.
போட்டியாளர்கள் பட்டியல் - பிக்பாஸ் வரலாற்றில் முதன் முறையான இரண்டு "திருநங்கைகள்"..! போட்டியாளர்கள் பட்டியல் - பிக்பாஸ் வரலாற்றில் முதன் முறையான இரண்டு "திருநங்கைகள்"..! Reviewed by Tamizhakam on October 03, 2021 Rating: 5
Powered by Blogger.