விவாகரத்தை அறிவித்தார் சமந்தா - வதந்தி உண்மையாகிடுச்சே.. - சோகத்தில் ரசிகர்கள்..!

 
கடந்த சில மாதங்களாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் குறித்த தகவல், தொடர்ந்து வெளியாகி வந்தாலும் இருவருமே அமைதி காத்து வந்தனர். 
 
இந்நிலையில் சமந்தாவின் கணவர் நாகசைதன்யா, பிரபல ஆங்கில ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில், சமந்தா விவகாரத்தில், விவாகரத்து வரை பலர் பேசி வருவது தனக்கு வேதனையாக இருக்கிறது என கூறியதால், இப்படி பரவி வரும் தகவல் வதந்தியாகவே பார்க்கப்பட்டது. 
 
ஆனால் சமந்தா தொடர்ந்து விவாகரத்து குறித்த கேள்விகளுக்கு எந்த ஒரு பதிலும் அளிக்காமல் இருந்தார். மேலும், மாமனார் நாகர்ஜூனாவின் பிறந்தநாள் பார்ட்டி, நாகர்ஜுனா குடும்பத்தினர் அமீர் கானுக்கு வைத்த பார்ட்டிகளில் கலந்துகொள்ளவில்லை. 
 
எனவே மீண்டும் இவரது விவாகரத்து விவகாரம் பேசும் பொருளாக மாறியது. இந்நிலையில் இன்றைய தினம் கூட நடிகை சமந்தா, இந்த விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் பரவியது. 
 
எனவே சமந்தாவுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் முதல் தற்போது கணவருடனான உறவை முறித்து கொள்ளப்போவதாக, நடிகை சமந்தா அதிகார பூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 
 

7 வருடங்கள் காதலித்து, பின்னர் மிகப்பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்ட சமந்தா - நாக சைதன்யா இந்த முடிவு எடுக்க என்ன காரணம்? என்பதே பலரது கேள்வியாக உள்ளது. குறிப்பாக சமந்தா சமீபத்தில் நடித்த வெப் சீரிஸ் காரணமாக இருவருக்குள்ளும் பிரச்சனை வந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்தை அறிவித்தார் சமந்தா - வதந்தி உண்மையாகிடுச்சே.. - சோகத்தில் ரசிகர்கள்..! விவாகரத்தை அறிவித்தார் சமந்தா - வதந்தி உண்மையாகிடுச்சே.. - சோகத்தில் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on October 02, 2021 Rating: 5
Powered by Blogger.