தமிழ் , தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய நடிகையாக வலம் வரும் நடிகை ராஷி கண்ணா தெலுங்கில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். தொடர்ந்து அடங்கமறு, அயோக்கியா, சங்கத்தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் சுந்தர்சியின் அரண்மனை 3 படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் விதவிதமான மாடர்ன் உடைகளை அணிந்துக்கொண்டு போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
கவர்ச்சியை தூக்கலாக காட்டியிருக்கும் ராஷி கண்ணா இப்படியும் போஸ் கொடுப்பாரா? என ரசிகர்கள் வியந்துவிட்டனர். அட அம்மணி ஒல்லியானதே கவர்ச்சி காட்டுறதுக்கு தானே….!
Tags
Rashi Khanna