காதல் கணவனுக்காக மொட்டை போட்டுக்கொண்ட நடிகை சீதா..! - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் பார்த்திபன். கடந்த வருடத்தில், இவர் இயக்கிய நடித்த ஒத்த செருப்பு படம் மக்கள் மனதை வென்று ஹிட் அடித்தது. 
 
புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் இந்த பார்த்திபன். அந்தப் படத்தின் நாயகியாக நடித்தவர் சீதா. முதல் படத்திலேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அது கல்யாணத்தில் நல்லபடியாக முடிந்தது. 
 
இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த இவர்கள் ஒரு ஆண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். இவர்களது காதல் காலங்களில் பார்த்திபனுக்காக சீதா மொட்டை போட்ட செய்தியை பார்த்திபனின் குருவும், நடிகருமான பாக்யராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 
 
அதில், “ஒருமுறை இயக்குனர் பார்த்திபனுக்கு நிற்காமல் விக்கல் எடுத்துக் கொண்டே இருந்தார். பல மருத்துவர்களை பார்த்தும் அந்த விக்கலை சரி பண்ண முடிய வில்லை. 
 

அதனால் பயந்து போன சீதா உடனடியாக சுவாமியிடம் வேண்டிக் கொண்டு மொட்டை போட்டுக்கிட்டாரு” என்று கூறியுள்ளார். இப்படி காதலுடன் இருந்த இந்த தம்பதி பிரிந்து போனது எப்படி என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்