"என்னடா நடக்குது இங்க..?.." - "நீங்களும் அப்டிதானே நெனச்சீங்க.." - மைனா நந்தினி ரொமான்ஸ்..!

 
சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் வெற்றிகரகமாக வலம் வருபவர் நடிகை மைனா நந்தினி. இவர் சின்னத்திரை நடிகர் யோகேஷை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 
 
புதுமண தம்பதி இருவரும் காதல் பொங்க விதவிதமாக எடுத்துள்ள ரொமான்ஸ் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை நந்தினி, விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் மைனாவாக அறிமுகமானார். 
 
அந்த சீரியலில் துருதுருவென துணிச்சல் மிக்க பெண்ணாக நடித்த அவர், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றார். இதனால் மைனா நந்தினி என அழைக்கப்பட்டார். 
 
தொடர்ந்து வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களில் நடித்திருந்தார் நந்தினி. அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப்பிள்ளை படத்திலும் நடித்திருந்தார் நந்தினி.
 
சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் அம்மணி தற்போது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 

இதனை பார்த்த ரசிகர்கள், என்ன டா நடக்குது இங்க..? நீங்களும் அப்படித்தானே நெனச்சீங்க..? என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.