"என்ன திட்டுற நேரத்துல உன்னோட பொண்டாட்டி வேற ஒருத்தன் கூட..." - கிழி கிழி என கிழித்த பிக்பாஸ் அனிதா..!


தமிழ் சின்னத்திரையில் சன் நெட்வொர்க்கில் செய்தி தொடர்பாளராக வலம் வந்தவர் அனிதா சம்பத். அதன் பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். 
 
மேலும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் ஷாரிக்குடன் இணைந்து நடனம் ஆடி மிகுந்த பாராட்டுகளை பெற்றார். கணவருடன் சேர்ந்து கலக்கல் ஷாப்பிங் செய்ய அனிதா சம்பத்.. பாவம் அவரோட ஹஸ்பன்ட் ‌‌-வைரலாகும் வீடியோ தற்போது தன்னுடைய கணவர் பிரபாவுடன் இணைந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
 
 
செய்தி வாசிப்பாளராக இருந்த போது கிடைத்த வரவேற்புகள் அனைத்தையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆரம்பித்த பிறகு நெகட்டிவ்வாக மாற ஆரம்பித்தது. 
 
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்து கொண்ட அனிதா சம்பத் ஏகப்பட்ட நெகடிவ் கமெண்ட்களை சம்பாரித்தார். இவர் மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களான அர்ச்சனா, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோரும் சமூக வலைத்தளங்களில் பலவித விமர்சனங்களுக்கும், ட்ரோல்களுக்கும் ஆளனார்கள். 
 
 
இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சமூக வலைத்தளங்களில் அவ்வளவாக தலைகாட்டவில்லை. இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை வைத்து நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகின்றனர். 
 
அதில் அனிதா சம்பத்தும் கலந்துகொண்டு பிரபல நடிகர் ரியாஸ்கான் மகனான ஷாரிக்குடன் இணைந்து நடனமாடி வருகிறார்.அப்போது எடுக்கபட்ட புகைப்படங்களை அனிதா சம்பத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 
 
 
இதற்கு கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவன், கேவலமாய் இல்லையா கண்டவன் கூட நிற்கிறத பெருமையா போட்டுட்டு இருக்க. இதைப் பார்த்துமா உன் புருஷன் உசுரோட இருக்கான் எனவும் மிகவும் ஆபாசமாக, தரக்குறைவான வார்த்தைகளில் பேசியிருந்தான்.
 
இதனை பார்த்து கடுப்பான அனிதா சம்பத், அவனுடய வழியிலே பதிலடி கொடுத்துள்ளார். அந்த நெட்டிசனின் கமெண்ட்க்கு, உன்னோட பெட்ரூமை பாரு, நீ இன்ஸ்டாகிராமில் என்ன திட்டுற நேரத்தில் உன் பொண்டாட்டி வேற யார் கூடயாவது போயிட போறாங்க என காரசாரமாக பதிலளித்துள்ளார். 
 
அவரின் கமெண்டை பார்த்த ரசிகர்கள் பலர் கொஞ்சம் பொறுமையா சொல்லிருக்கலாம் எனவும், வேறு சிலரோ இந்த மாதிரி நபர்களுக்கு இப்படி பதிலடி கொடுத்தா தான் அடங்குவாங்க என்றும் அனிதா சம்பத் செயலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.