யார் அந்த வாய்ப்பை பறித்த பேரன்..? - பிக்பாஸ் அபிநய் வட்டி.. கூறியது இவரை தானாமே..!

 
 
ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரி ஆகியோரின் பேரன் என்கிற அடையாளத்தோடு பிக் பாஸ் 5 வீட்டுக்கு போட்டியாளராக வந்திருக்கிறார் அபினை வட்டி. 
 
அவர் வாழ்க்கை கதையை இன்று பிக் பாஸ் வீட்டில் கூறினார். நடிகையர் திலகத்தின் பேரன் அபிநய் வட்டி தான் பட்ட துயரங்களையும் கஷ்டங்களையும் தனக்கு மறுக்கப்பட்ட சினிமா வாய்ப்புகள் குறித்து நேற்றைய எபிசோடில் பேசி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
 
இறுதியாக அவர் கூறிய விஷயம், இணையத்தில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி விட்டுள்ளது. அபிநய் வட்டி பேசும் போது, தான் நடிக்கவிருந்த முதல் படத்தில் தனக்கு பதிலாக ஒரு பிரபல நடிகரின் பேரன் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டார் என அழுத்தம் திருத்தமாக குறிப்பிட யார் அந்த பிரபலம்? அபிநய் வட்டி குறிப்பிட்டது எந்த பேரன் நடிகரை மற்றும் இயக்குநர் யார்? என்கிற அலசல்கள் சமூக வலைதளங்களில் கிளம்பி உள்ளன. 
 
இந்நிலையில், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான் எனவும் அதன் பிறகு தான் சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு படத்தில் கமிட்டானர் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
 
 
ஒரு பக்கம் வாரிசு நடிகர்கள் தான் சினிமா உலகை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.. நெபாட்டிசம்.. என்கிற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், மறு பக்கம் நான் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரியின் பேரன் என்னை அழைத்து பலரும் பேசுகின்றனர். 
 
ஆனால், பட வாய்ப்புகளை தர மறுக்கின்றனர் என அபிநய் வட்டி பகீர் குற்றச்சாட்டை பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைத்திருப்பது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் கொடுக்கிறது.

--- Advertisement ---

 

Health Insurance, How to buy insurance online

ஹெல்த் இன்சுரன்ஸ்: வகைகள், தேர்வு செய்யும் முறை, மற்றும் ஏமாறாமல் இருக்க வழிகள்