"ட்ரெஸ் மாத்தும் போது... இப்படியா பண்றது..?..." - தன் பெயரை தாறுமாறாக டேமேஜ் செய்து கொண்ட பாவனி..!

 
தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக கலகலப்பாக சென்றது. 
 
இது பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது விறுவிறுப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று அனைவரும் எதிர்பார்த்தபடி அபிஷேக் எலிமினேட் செய்யப்பட்டார். 
 
இந்நிலையில், இன்றைய எபிசோடில் போட்டியாளர் தாமரைச்செல்வி என்பவரிடம் இருந்து நடிகை பாவனி ரெட்டி மற்றும் போட்டியாளர் மதுமிதா ஆகியோர் மோசமான முறையில் எலமென்ட் காயினை அபகரித்துக்கொண்ட சம்பவம் அரங்கேறியது. 
 
குளித்து முடித்து உடை மாற்றிக்கொண்டிருந்த போட்டியாளர் தாமரைச்செல்வியிடம் இருந்து அவரது கவனத்தை திசை திருப்பி லாவகமாக காயினை அபகரித்துக்கொண்டார் மதுமிதா. 
 
இந்த சம்பவம் நடக்க உறுதுணையாக இருந்த பாவனி ரெட்டியை தாமரைச்செல்வி கடுமையாக சாடினார். ஒரு பெண் உடை மாற்றிக்கொண்டிருக்கும் போது தான் உங்கள் விளையாட்டை காட்ட வேண்டுமா..? உங்களை நம்பித்தானே உடை மாற்றும் அறையில் பிரவேசிக்க அனுமதித்தேன். 
 
ஆனால், என்னை திசை திருப்பி நான் வைத்திருந்த காயினை அபகரித்துக்கொண்டது முறையல்ல. எனக்கு அந்த காயின் வேண்டாம் ஆனால், நீங்கள் செய்தது மிகவும் தவறு என்று சாடினார். 
 
சக போட்டியாளர்களும் பாவனி ரெட்டி, மதுமிதா செய்தது தவறு தான் என்று வழிமொழிந்தனர். விளையாட்டு என்று நினைத்து பாவனி ரெட்டி செய்த இந்த காரியம் அவரது பெயரை பெரிய அளவில் டேமேஜ் செய்துள்ளது.
 
வரும் நாட்களில் இந்த பிரச்சனையை சுமூகமாக முடித்துக்கொள்ளாத பட்சத்தில் இவர் பெயர் ஏகத்துக்கும் அடி வாங்கும் என்பது பொதுவான பிக்பாஸ் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்