"என்னது....?..." பிக்பாஸ் மேடையில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நடியா சேங்..! - ஷாக் ஆன ரசிகர்கள்..!

 
விஜய் டிவி.,யில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ஐந்தாவது சீசன் துவங்கப்பட உள்ளது. 
 
ஐந்தாவது சீசனின் துவக்க விழா இன்று மாலை 6 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகின்றது.அடுத்த 100 நாட்களுக்கு தினமும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாக உள்ளது. 
 
வார இறுதி நாட்களில் கமல் வரும் எபிசோட்கள் இரவு 10 மணிக்கு துவங்கி, 11.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டியாளர்கள் பற்றிய கேள்வி தான் அனைவரின் மனதிலும் உள்ளது.
 
இந்நிலையில் பிரபல மலேசிய மாடலான நடியா சேங் (Nadia Chang) தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. இதுவரை தந்த ஆதரவை இந்த நிகழ்ச்சியில் நான் பயணிக்கவும் தர வேண்டும். 
 
 
உங்களது கேள்விகள், சந்தேகங்கள் எதுவானாலும் எனக்கு அனுப்பலாம். இனி எனது அக்கவுண்ட்டை எனது சகோதரர்கள் கையாள்வார்கள். எனது சார்பாக அவர்கள் உங்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள் என பேசி இருந்தார். 
 
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன் மேடையில் பேசுகையில், எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் என்று ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். 


இதனை கேட்ட ரசிகர்கள், எதோ மாடல் அழகி என்று சொன்னாங்க.. மூன்று குழந்தைக்கு அம்மா-வா..? என்று ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post