"ஸ்ருதி என்ன நம்புறா.." - அபிஷேக்கிற்கு இரண்டு மணி நேரத்தில் பதிலடி கொடுத்த ஸ்ருதி..!


என்ன என்ன சொல்றான் பாருங்க.. கம்பி கட்டுற கதையெல்லாம் இழுத்து போடுறாங்க.. என்று பிரபலமான காமெடியால் அபிஷேக்கை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
 
ப்ரோமோவில் வரவேண்டும் என்பதற்காக அபிஷேக் செய்யும் வேலைகள் எல்லாம் வேற லெவல் தான் என்று ரசிகர்கள் ஒரு பக்கம் அவரை உசுப்பேற்றி விடுகின்றனர். 
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்துக்கு குறை இல்லாமல் கொண்டு போய்க் கொண்டிருப்பதில் அபிஷேக் ஒருவர் என்று அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். 
 
வேற லெவல் திறமை தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருப்பதால், எப்படியும் இந்த சீசனில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் தான் இருந்து கொண்டிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். 
 
ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு படி இந்த சீசன் அமையவில்லை. காரணம் இவர்கள் ஒரு பக்கம் அடித்துக் கொண்டாலும் மறுபக்கம் உடனே சமாதானம் ஆகி விடுகின்றனர். அதிலேயும் அபிஷேக் வேற லெவலில் இந்த விளையாட்டை விளையாடி வருகிறார். 
 
தன்னுடைய மனதில் இருக்கும் கோபத்தை எல்லாம் அடுத்தவர்கள் மீது தெளித்துவிட்டு அதற்குமேல்... பாசம், உரிமை சுண்ணாம்பு பூசி விடுகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், நேற்று 18-ம் நாள் இரவு 9 மணிக்கு சக போட்டியாளர் நிரூப்பிடம் நான் ஸ்ருதியின் நம்பிக்கையை பெற்றுவிட்டேன் என்று கூறி புலகாங்கிதம் அடைகிறார் அபிஷேக். 
 

 
ஆனால், ஸ்ருதியோ அடுத்த இரண்டே மணி நேரத்தில் ஒரு பேச்சுவார்த்தையின் போது மூடிகிட்டு உங்க வேலையை பாருங்க.. என்று மூக்குடைத்துள்ளார். இந்த குறும்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.

Post a Comment

Previous Post Next Post