"அக்கா என சொல்லி.." பாவனி மடியில் அபிஷேக் ராஜா.. - நான் உங்க தம்பி இல்லையா..? - கேட்டது யாருன்னு பாருங்க..!

 
எந்த ஒரு டிவி நிகழ்ச்சி, சீரியலாக இருந்தாலும் அதற்கு டிஆர்பி ரேட் என்பது முக்கியமானது. அந்த நிகழ்ச்சி வெற்றி அடைகிறது என்பதற்கு பலமே டிஆர்பி ரேட்டிங்தான். 
 
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பி ரேட்டை ஏற்றுவதற்காகவே சில விஷயங்களை சீசனுக்கு சீசன் விஜய் டிவி செய்து வருகிறது.நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் யூடியூப் விமரிசகர் அபிஷேக் ராஜா. 
 
இவர் சமூக வலைதளங்களல் மிகப் பிரபலம். அவ்வப்போது சினிமா தகவல்களை தனது ட்விட்டர் பக்கம் மூலம் வழங்கிக்கொண்டிருந்தார். பிரபலங்களை தனக்கே உரிய பாணியில் நேர்காணல் நடத்தி எதிர்மறையான விமரிசனங்களை சந்தித்தார். 
 
நிகழ்ச்சி தொடங்கி மூன்று நாட்களுக்குள்ளேயே அவர் பேசுவது இரிட்டேட்டாக உள்ளது என ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. அந்த அளவுக்கு ஓவராக பேசி வருகிறார் அபிஷேக் ராஜா. இதனிடையே ஏற்கனவே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வெளியிட்ட வீடியோக்களும் வைரலாகி வருகிறது. 
 
 
அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் மெத்தையில் தலையணை போட்டு அதன் மீது படுத்துக் கொண்டிருக்கிறார் அபிஷேக். அந்த தலையணையை தன் மடியில் வைத்து அபிஷேக்குக்கு தலையை பிடித்துவிடுகிறார் பாவனி. அதை பார்த்த ராஜூ, இமான் அண்ணாச்சியிடம் சொல்லி, “அங்க பாருங்க.. அவனை என்னன்னு கேளுங்க!” என்று கூற, அருகில் இருந்த சிபி சிரித்தபடி, “கோர்த்து விட்டான்” என்று கூறுகிறார். 

 
அப்போது இமான் அண்ணாச்சி, ராஜூ சொன்னதைக் கேட்டு அபிஷேக்கிடம் சென்று, “டேய் அவ ஏதாவது சொல்லி உன்ன அழவெப்பா” என்று கூற, அங்கு வரும் ராஜூ, “அக்காவா நானும் கூட தம்பிதானே?” என்று சொன்னதுடன் மேலும், “தம்பினா இப்படி ஒரு சலுகையா?” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுகிறார்.

Post a Comment

Previous Post Next Post