"நீங்களும் அப்டிதானே நெனச்சீங்க.. பாத்தாலே எச்சில் ஊறுதே..." - ஐஸ்வர்யா ராஜேஷ்-ஐ கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. 
 
விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார். 
 
 
தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். 
 
 
காக்காமுட்டை க/பெ ரணசிங்கம் கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். 
 
 
தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
 
 
இந்நிலையில், சிக்கன் சாப்பிடும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.


இதனை பார்த்த ரசிகர்கள், நீங்களும் அப்டிதானே நெனச்சீங்க.. பாத்தாலே எச்சில் ஊறுதே.. என்று கமெண்டி வருகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post