"என்னது...?.." - இது தனுஷோட பையனா..? - நெடு நெடுன்னு வளர்ந்துட்டாரே..! - ரசிகர்கள் ஷாக்..!

 
தனுஷ், ஐஸ்வர்யா தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் யாத்ரா அப்பா உயரத்திற்கு வளர்ந்துவிட்டார். இந்நிலையில் யாத்ராவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் அம்மா ஐஸ்வர்யா. 
 
ஐஸ்வர்யா தன் மகனை பாசமாக கட்டிப்பிடித்தபோது எடுத்த புகைப்படம் அது. யாத்ராவை பார்த்தவர்கள் அது தனுஷ் என்று நினைத்துவிட்டனர். தனுஷுக்கு தாடி, மீசையை எடுத்துவிட்டால் எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கிறார் யாத்ரா. ஒரு நிமிஷம் அடையாளமே தெரியவில்லை என்று ரசிகர்கள் வியந்து தெரிவித்துள்ளனர்.
 
நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2006 ஆம் ஆண்டு யாத்ரா என்ற மகனும் 2010ஆம் ஆண்டு லிங்கா என்ற மகனும் பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
இந்த நிலையில் தனுஷ், ஐஸ்வர்யாவின் மகன் யாத்ராவின் 15 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதுகுறித்து தனது மகனை கட்டிப்பிடித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை ஐஸ்வர்யா தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 
 
அதில் ’உன் அம்மாவாக இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன் என்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் என் முதல் குழந்தையான உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன் என்றும் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று உன்னை பார்க்கும் போதெல்லாம் எனக்கு தோன்றும் என்றும், கடவுள் உன்னை நேசிப்பார் என்றும், கடவுள் உன்க்கு வாழ்க்கையில் அனைத்தையும் வழங்குவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இந்த புகைப்படத்தை பார்த்த பலர் தனுஷின் மகன் யாத்ரா அப்படியே தனுஷை உரித்து வைத்தாற்போல் உள்ளார் என்றும் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்துவருகின்றனர்.

"என்னது...?.." - இது தனுஷோட பையனா..? - நெடு நெடுன்னு வளர்ந்துட்டாரே..! - ரசிகர்கள் ஷாக்..! "என்னது...?.." -  இது தனுஷோட பையனா..? - நெடு நெடுன்னு வளர்ந்துட்டாரே..! - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on October 12, 2021 Rating: 5
Powered by Blogger.