பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த இவர் இப்பொழுது கை நிறைய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அடிக்கடி சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வரும் ரைசா இப்பொழுது தனித்தீவில் கையில் மது பாட்டிலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளார்.
தனுஷின் வேலையில்லா பட்டதாரி மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் வெளியானது. அதில் கஜோலுக்கு பி ஏ வாக நடித்து திரையில் முகத்தை காட்டிய ரைசா வில்சன் அதன்பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலம் அடைந்தார்.
குறிப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இளைஞர்களை பெரிதாக கவர்ந்த இவர் அப்போதே ஹரிஷ் கல்யாண் உடன் கிசுகிசுக்கப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் அதன் பின் ஒன்றாக பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தனர்.
பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரைசா வில்சனுக்கு அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. இப்போதுள்ள இளம் காதலையும் காதலர்களையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றதுடன் ஹரிஷ் கல்யாண் ரைசா வில்சன் ஜோடி அனைவராலும் ரசிக்கப்பட்டது.
மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து படங்களில் நடிக்க வேண்டும் என பலரும் ஆசைப்பட்டனர். ஆரம்பம் முதலே கவர்ச்சிக்கு தாராளம் காட்டி நடித்து வரும் ரைசா வில்சன் அர்ஜுன் ரெட்டி முதலில் வர்மா என்ற பெயரில் உருவாக அதில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் படுக்கை அறை உள்ளிட்ட காட்சிகளில் நடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
இந்த திரைப்படம் திரையில் வெளியாகவில்லை என்றாலும் பின் ஓடிடியில் வெளியானது. இவ்வாறு ஒவ்வொரு படத்திலும் சர்ச்சைகளை கிளப்பி வரும் ரைசா சமீபத்தில் கூட முகம் அழகு பெற சிகிச்சை பெற்று அது எதிர் வினையாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது ஒருபுறமிருக்க சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் அநியாயத்திற்கு கவர்ச்சி புகைப்படங்கள் ஒருபுறம் வைரலாகி வந்தாலும் மறுபுறம் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில், பிகினி.. வரிக்குதிரை டிசைன் பிகினி ஒன்றை அணிந்து கொண்டு மெல்லிய மேலாடை அணிந்தபடி முட்டி போட்டுக்கொண்டு கையை தூக்கி ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
0 கருத்துகள்