"நாங்க கூட புதுசுன்னு நெனசிட்டோம்.." - மைனா நந்தினி வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் பகீர்..!

 
காதல் என்று சொன்னால் அங்கு எதிர்பார்ப்புகளே இல்லாமல் இருப்பதுதான். அதை தற்போது நந்தினியும் அவருடைய கணவரும் ஆன யோகேஸ்வரனும் நிரூபித்து இருக்கின்றனர். 
 
இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டாலும், இப்பவும் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் காதலுக்கு அடையாளமாக ஒரு ஆண்குழந்தை பிறந்து இருந்தாலும் தற்போது மீண்டும் காதல் பறவைகள் ரெக்கை கட்டி பறந்து வருகின்றனர்.
 
விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை மைனா நந்தினி. 
 
சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும், பல்வேறு படங்களில் நடித்துள்ள மைனா சிவகார்த்தியேகன் நடிப்பில் வெளியாகி இருந்த நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நடித்திருந்தார்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் பிரபல விஜய் டிவி ஜோடியான சஞ்சீவ் – ஆல்யா இரண்டாம் குழந்தை பிறக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், மைனா நந்தினியும் தான் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட பலரும் இரண்டாவது முறையாக கர்ப்பமாகி விட்டார் என்று நினைத்துவிட்டனர். 
 

பிறகு, கேப்ஷனை பார்த்த பிறகு தான் இது பழைய புகைப்படம் என்பது தெரிய வந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், நாங்க கூட புதுசு-ன்னு நெனச்சிட்டோமே.. என்று கலாய்த்து வருகின்றனர்.