கவுதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் வெளிவந்த "நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் நகைச்சுவை நடிகையாக அறிமுகமான வித்யூலேகா ராமன், அதன் பின்னர் 'தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிச்சட்டை, மாஸ் என அஜீத், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் படங்களிலும் நடித்துவிட்டார்.
சமீபத்தில் வெளிவந்த சந்தானம் ஹீரோவாக நடித்த 'இனிமே இப்படித்தான்' படத்தில் கிளைமாக்ஸில் சந்தானத்தின் மனைவியாக நடித்து படத்தின் டுவிஸ்ட்டிற்கு உதவியாக இருந்தார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் தெலுங்கில் உருவாகவிருக்கும் அல்லுஅர்ஜூன் நடிக்கும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் சிறப்பு என்னவெனில் இது இவருக்கு 25வது படம் என்பதுதான்.
2012ஆம் ஆண்டு தனது திரையுலக வாழ்க்கையை தொடக்கிய வித்யூலேகா ராமன் மூன்றே வருடத்தில் 25 படங்களில் நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நகைச்சுவை நடிகைக்கு இருந்த பற்றக்குறையை நிவர்த்தி செய்துள்ளார்.
கோலிவுட்டில் புதுப்புது நகைச்சுவை நடிகர்கள் பலர் தோன்றி வரும் நிலையில் நகைச்சுவை நடிகைகள் இவரை போல அத்திபூத்தாற்போலத்தான் ஜொலிக்கின்றனர். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வித்யுலேகா.
வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க, வேதாளம் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இதுவரை காமெடி கதாபதிரங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வித்யுலேகாவா இது என்று ஆச்சரியப்படவைக்கும் படி உள்ளன.
கவர்ச்சி அவதாரமெடுத்துள்ள இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
0 கருத்துகள்