விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதற்கு முன்னதாக ‘காலா’,‘விஸ்வாசம்’ என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும் சாக்ஷிக்கு அட்ரஸ் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே சாக்ஷி அகர்வால் சோசியல் மீடியாவின் இளவரசியாகிவிட்டார். முதலில் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாக ஆரம்பித்த சாக்ஷி தற்போது அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துவிட்டார்.
மெழுகு சிலை போல் கொழு, கொழு அழகில் மனதை அள்ளும் சாக்ஷி புடவை, தாவணி, மார்டன் டிரஸ் என சகட்டுமேனிக்கு போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அதன் பலனாக தற்போது கைவசம் ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்கள் உள்ளன. அதுமட்டும் இல்லாமல் மாடலிங்கில் வேறு புகுந்து விளையாடி வருகிறார்.
சமீபத்தில் புடவையில் கூட உச்சகட்ட கவர்ச்சி காட்ட முடியும் என சகட்டுமேனிக்கு போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வாலின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. தற்போது அதை விட அல்டிமேட்டான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
நீச்சல் குளத்தைத்தையே சூடேற்றும் வகையில், பச்சை நிற உடையில் படு கிளாமரான உடையில் போட்டோஸ் சில வற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க.. என்று திணறி வருகிறார்கள்.
Tags
Sakshi Aggarwal