"என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.." - இத நயன்தாரா-ன்னு சொன்னா விக்னேஷ் சிவனே நம்ப மாட்டாரே..!

 
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தான் கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை ஆவார். இத்தனை ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்த நயன்தாரா அட்லி படம் மூலம் பாலிவுட்டுக்கு சென்றிருக்கிறார்.
 
அவர் தென்னிந்திய நடிகையாக இருந்தாலும் பாலிவுட்டிலும் பிரபலமாக இருக்கிறார். இந்நிலையில் போர்ப்ஸ் இந்தியா பத்திரிகையின் அட்டைப்படத்தில் நயன்தாராவின் புகைப்படம் வந்திருக்கிறது.
 
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெருமை அடைந்துள்ளனர். அதே சமயம் ஏமாற்றமும் அடைந்திருக்கிறார்கள்.போர்ப்ஸ் போன்ற பெரிய பத்திரிகையின் அட்டைப் படத்தை பார்த்தால் போட்டோஷாப் செய்தது போன்று மோசமாக இருக்கிறது. 
 
 
நயன்தாராவை ஒழுங்காகவே புகைப்படம் எடுக்கவில்லை.. என்னடா பண்ணி வச்சிருக்கீங்க... வேறு யார் மாதிரியோ தெரிகிறார். அவருக்கு அளித்திருக்கும் உடையும் மோசம். 

 
ஒரு லேடி சூப்பர் ஸ்டாரை இப்படித் தான் மோசமாக காட்டுவதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதை நயன்தாரா-ன்னு சொன்னா..? விக்னேஷ் சிவனே நம்ப மாட்டார் போல இருக்கே.. என்று கலாய்த்து வருகின்றனர்.

"என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.." - இத நயன்தாரா-ன்னு சொன்னா விக்னேஷ் சிவனே நம்ப மாட்டாரே..! "என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.." - இத நயன்தாரா-ன்னு சொன்னா விக்னேஷ் சிவனே நம்ப மாட்டாரே..! Reviewed by Tamizhakam on October 11, 2021 Rating: 5
Powered by Blogger.