இதனால் தான் பாவனி நாமினேட் ஆகல.. - ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட அபிஷேக்..! - பாராட்டும் ரசிகர்கள்..!

 
விஜய் தொலைக்காட்சியில் ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி போன்ற நாடகத்தின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய சின்னத்திரை நடிகை பவானி ரெட்டி. இவர் பிக் பாஸ் சீசன் 5ல் தற்போது களமிறங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியால் மக்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துவிட்டார். 
 
பிக்பாஸ் வீட்டிற்கு பவானி ரெட்டி அடி எடுத்து வைத்த நாள் முதல் இன்று வரை இவரை பற்றி பல தகவல்கள் கசிந்து வருகிறது. ஏனெனில் இவரது கணவரின் தற்கொலைக்கு இவரும் ஒரு காரணமாக கருதப்பட்டு வருகிறார். காதலித்து, திருமணம் செய்து கொண்டு, எட்டு மாதங்கள் மட்டுமே இணைந்து வாழ்ந்த நிலையில், இவரது கணவர் தற்கொலை செய்துள்ளார். 
 
அந்த நேரத்தில் நடிகை பாவனி ரெட்டியுடன் வேறு ஒரு நபர் தொடர்பில் இருந்ததாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் இவரது கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பலரும் கருதி வந்தனர். 
 
இந்நிலையில் தற்போது இவருக்கு இரண்டாவது திருமணம் நடந்ததா, இல்லையா என்பது குறித்து பல சர்ச்சைக்குரிய கேள்விகள் எழுந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் சமீபத்தில் நடந்த ‘கதை சொல்லட்டுமா’ என்ற ஒரு டாஸ்கின் மூலம், இவர் தனது மனதில் இருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். 
 
இதனை தொடர்ந்து, நேற்று திங்கள் கிழமை நாமினேஷன் நடைபெற்றது. இதில், கிட்ட தட்ட எல்லா போட்டியாளர்களும் நாமினேட் ஆனார்கள். ஆனால், பாவனி ரெட்டி.. தாமரை செல்வி மட்டும் தான் நாமினேட் ஆகவில்லை. பொதுவாக, அதிக பேரால் சொல்லப்படும் போட்டியாளர் பெற்றவர்கள் மட்டுமே நாமினேட் ஆவார்கள். 
 
ஆனால், இந்த முறை ஒருவர் கூறியிருந்தால் கூட நாமினேஷன் லிஸ்டில் வந்துவிட்டார்கள். போட்டியாளர்களை ரசிகர்கள் மத்தியில் இன்னும் அழுத்தமாக கொண்டு சேர்க்கவே இந்த ஏற்பாடு. 
 
 
ஆனால், பிக்பாஸ் ஆராய்ச்சியாளரும், பிரபல யூட்யூபருமான அபிஷேக் யார் யார் எதற்காக நாமினேட் ஆனார்கள்.. யார் யார் நாமினேட் ஆகவில்லை.. அதற்கு என்ன காரணம் என்று தன்னுடைய ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளார். 
 
அதன் படி, பாவனி ரெட்டி சொன்ன கதை சக போட்டியாளர்களிடையே பெரிய பாதிப்பை உண்டு பண்ணியுள்ளது. அதனால் தான் யாரும் பாவனியை நாமினேட் செய்யவில்லை என்று தன்னுடைய சோதனை முடிவுகளை கூறியுள்ளார். 
 
இதனை கேட்ட பிக்பாஸ் ரசிகர்கள் எவ்வளவுகடினமான ஆராய்ச்சியை செய்துள்ளார் அபிஷேக் என வாயை பிளந்து வருவதுடன் அவருக்கு தங்களது பாராடுகளையும் கூறி வருகின்றனர்.

இதனால் தான் பாவனி நாமினேட் ஆகல.. - ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட அபிஷேக்..! - பாராட்டும் ரசிகர்கள்..! இதனால் தான் பாவனி நாமினேட் ஆகல.. - ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட அபிஷேக்..! - பாராட்டும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on October 11, 2021 Rating: 5
Powered by Blogger.