பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நமீதா..! - இது தான் காரணம்..! - ரசிகர்கள் அதிர்ச்சி..!


பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில்18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். 
 
எந்த ஒரு பிக்பாஸ் சீசனிலும் இல்லாத வகையில் இந்த முறை திருநங்கையான நமீதா மாரிமுத்து போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.நமீதா மாரிமுத்து பிரபல மாடல் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் பல படங்களிலும் நடித்துள்ளார்.
 
பிக்பாஸ் வீட்டில் நடந்து வரும் கதை சொல்லும் டாஸ்கில் நமீதா மாரிமுத்து தனது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்களை பகிர்ந்துக்கொண்டார். 8 வயதில் உடலில் நடந்த மாற்றத்தால் தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்று பெற்றோர்களை எதிர்த்து போராடி ஒரு சாதனை திருநங்கையாக பிக்பாஸ் வீட்டில் பேசினார். 
 
மேலும் ‘எங்கள மாதிரி உள்ளவங்கள புரிஞ்சிக்கணும், புரிஞ்சிக்காம வீட்டை விட்டு வெளியே அனுப்புறதுனால தான் நாங்க படாத கஷ்ட படுறோம், எங்கள படிக்க மட்டும் வையுங்க’ என்று கண்ணீருடன் பேசினார்.ஒரு மணி நேர எபிசோடில் நமிதா மாரிமுத்து கிட்டத்திட்ட 40 நிமிடங்கள் பேசினார். 
 
இந்நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமீதா மாரிமுத்து வெளியேறியுள்ளார். இதற்க்கான காரணம் என்னவென்று பிக்பாஸ் கூறுகையில் தவிர்க்க முடியாத காரணம் என்று மட்டுமே கூறினார்கள். 
 
இதுகுறித்து விவரம் அறிந்தவர்களிடம் கேட்ட போது அவரது உடல் நலத்தில் ஏற்பட்ட பிரச்சனை தான் காரணம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வது முக்கியம் என்பதால் அவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். விரைவில் மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியாக வருவார் என்றும் கூறுகிறார்கள்.