டூ பீஸ் பிகினி உடையில்.. ஒட்டுமொத்தமாக படம் போட்டு காட்டி.. இணையத்தை சூடேற்றிய நடிகை ஷெரின்..!

 
தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதன்பின்னர் ‘விசில்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த ஷெரின் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 
 
இந்த நிகழ்ச்சியின் மூலம் ஷெரினுக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்த நிலையில் மீண்டும் திரையுலகில் ஒரு ரவுண்டு வருவதற்காக காத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது உடல் எடை அதிகமாக இருந்த ஷெரின், தற்போது ஆச்சரியப்படும் வகையில் 10 கிலோ எடை குறைந்து காணப்படுகிறார். கிட்டத்தட்ட ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானது போலவே தோற்றமளிக்கும் ஷெரின் இதுகுறித்து கூறியபோது, ‘ஒரே வருடத்தில் 10 கிலோ எடை குறைந்து தற்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன். எனது தோற்றத்தை பார்க்கும்போது எனக்கே மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. 
 
 
உடல் எடை குறைப்பது என்பது மிகவும் எளிதானது. மற்றவர்களை புண்படுத்தும் வகையிலான வார்த்தைகளை நாம் பயன்படுத்தாமல் மகிழ்ச்சியாக இருந்தாலே போதும். நீங்கள் பேசும் வார்த்தையினால் உங்கள் எதிரில் உள்ளவர்கள் புன்னகைக்க வேண்டுமா? அல்லது கண்ணீர் சிந்த வேண்டுமா? என்பதை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார். 
 
 
உடல் எடையை குறைக்க மணிக்கணக்கில், நாட்கணக்கில் உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டாலே போதும் உடல் எடை குறைந்துவிடும் என்ற கோணத்தில் ஷெரின் கூறியது மிகவும் வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். 


ஷெரினின் இந்த கொள்கையை அனைவரும் பின்பற்றினால் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமின்றி உலகில் பாசிட்டிவிட்டி அதிகரிக்கும் என்றும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில், டூ பீஸ் நீச்சல் உடையில் மொத்த அழகையும் படம் போட்டு காட்டிய அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.
டூ பீஸ் பிகினி உடையில்.. ஒட்டுமொத்தமாக படம் போட்டு காட்டி.. இணையத்தை சூடேற்றிய நடிகை ஷெரின்..! டூ பீஸ் பிகினி உடையில்.. ஒட்டுமொத்தமாக படம் போட்டு காட்டி.. இணையத்தை சூடேற்றிய நடிகை ஷெரின்..! Reviewed by Tamizhakam on November 22, 2021 Rating: 5
Powered by Blogger.