"ஓ** அது மட்டும் சரியா..?" - அக்ஷராவை கெட்ட வார்த்தையில் திட்டிய சிபி..! - அதிர்ந்த பிக்பாஸ் ரசிகர்கள்..!


‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. 
 
கடந்த அக்டோபர் 3-ந் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். 
 
 
மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப் படலம் நடக்கும். அதன்படி இதுவரை, நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சுருதி வெளியேற்றப்பட்டார். 
 
இந்த வாரம், லக்சுரி பட்ஜெட் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. போட்டியின் போது போட்டியாளர் நிரூப் சக போட்டியாளர்களை இழுத்து பிடித்துக்கொண்டு டாஸ்க்கை செய்ய விடாமல் தடுத்தார். இதனை தொடர்ந்து, போட்டியாளர் வருண், நிரூப் இடையே கடுமையான வார்த்தை போர் மூண்டது. 
 
 
இதில், வருணுக்கு ஆதரவாக நிரூப் தங்களை இழுத்து பிடித்துக்கொண்டிருந்தது தவறு அக்ஷரா பேசினார். இந்நிலையில், போட்டியாளர் சிபி கடந்த வார டாஸ்கில் என்னை நீ இழுத்து பிடித்தது சரி என்றால் இதுவும் சரி என்று பேச கடுமையான விவாதம் மூண்டது. 


இதனை தொடர்ந்து, நான் உன்னை தள்ளி விட்டேன் தவிர இழுத்து பிடிக்கவில்லை என கூற கோபத்த்தின் உச்சத்திற்கு சென்ற சிபி.. தள்ளி விடுறது ஒன்னு.. ஓ** இழுத்து பிடிக்குறது வேறையா..? என்று அசிங்கமாக பேச சக போட்டியாளர்கள் ஒரு நிமிஷம் ஆடிப்போய் விட்டார்கள். 
 
பிறகு, சுதாரித்து கொண்டு நான் அக்ஷராவை திட்டவில்லை என பிரியங்காவிடம் முறையிட்டு கொண்டிருந்தார் சிபி.
"ஓ** அது மட்டும் சரியா..?" - அக்ஷராவை கெட்ட வார்த்தையில் திட்டிய சிபி..! - அதிர்ந்த பிக்பாஸ் ரசிகர்கள்..! "ஓ** அது மட்டும் சரியா..?" - அக்ஷராவை கெட்ட வார்த்தையில் திட்டிய சிபி..! - அதிர்ந்த பிக்பாஸ் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 09, 2021 Rating: 5
Powered by Blogger.