எவ்வளவு பெரிய கதாநாயகியாக இருந்தாலும் சரி திருமணம் முடிந்து விட்டால் அவர்கள் ஓரம்கட்ட படுகிறார்கள். அல்லது கதாநாயகிகளின் தோழியாகவும் அம்மா வாகவும் மாறி விடுகிறார்கள் .அது வரைக்கும் முன்னணி நடிகையாக நடித்தவர்கள் திருமணத்திற்கு பிறகு செகண்ட் ஹீரோயினாக வலம் வருவது தான் தற்போது சினிமாத்துறையில் நடந்து கொண்டிருக்கிறது .
இது நடிகர்களுக்கு மட்டும் பொருந்துவதில்லை. எத்தனை வயது ஆனாலும் பேரன் பேத்தி எடுத்தாலும் கூட நடிகர்கள் இப்ப வரைக்கும் ஹீரோவாக மாஸ் காட்டி வருகிறார்கள். ஆனால் தற்போது சின்னத்திரையின் அழகு பதுமையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹேமா ராஜ்குமார் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா கேரக்டரில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார் .
இவர் வில்லத்தனம் செய்யும் அழகான மருமகள் ஆகவும் இந்த சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் ஒட்டிக் கொண்டார். என்னதான் இவர் குடும்பத்திற்குள் பிரச்சினை கிளம்பும்போது ரசிகர்கள் இவரை கழுவி கழுவி ஊற்றினாலும் குடும்பத்திற்கு பிரச்சனை என்று வந்துவிட்டால் முன்நின்று அனைவரையும் அசத்தி விடுகிறார்.
இவர் இப்படியா என்று யோசிக்கிற அளவுக்கு திடீரென பல்டி அடிக்கும் இவரது குணத்தை பலருக்கும் பிடித்திருக்கிறது. வில்லத்தனம் என்றாலே பலரையும் பழிவாங்கி கொலை பண்ணுவது மட்டும்தான் என்று இல்லை. ஒரு குடும்பத்திற்குள் இவருடைய கேரக்டரில் எப்படியும் ஒரு சிலர் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த கேரக்டரை அப்படியே தன்னுடைய நடிப்பால் வெளிக்காட்டி ரசிகர்களின் மனதிலும் இடத்தைப் பிடித்திருந்தாலும் தற்போது தான் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்நிலையில், ஈரமான தலைமுடியுடன்.. துளி மேக்கப் போடாமல் எடுத்துகொண்ட சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.
Tags
Hema Rajkumar