முதன் முறையாக நீச்சல் உடையில் கௌரி கிஷன்..! - ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

 
விஜய் சேதுபதி, திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி செம ஹிட் அடித்த திரைப்படம் 96. இப்படத்தில் த்ரிஷாவின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை கெளரி கிஷன். பெரிய அளவிற்கு இந்த கதாபாத்திரம் பேசப்பட்டதை தொடர்ந்து, இவர் நடிப்பிற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. 
 
அதன் பின்னர், மலையாள மொழியில் மார்கம்கலி என்னும் படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து, மாஸ்டர், கர்ணன், அனுக்ரஹிதன் அந்தோணி உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆனார். தற்போது, இவர் மற்றும் டிக்கிலானா பட கதாநாயகி அனகா நடிப்பில் வெளியாகவுள்ள ‘மகிழினி’ திரைப்பட ட்ரைலர் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது. 
 
 
இதில் இவர் ஓரினசேர்க்கையாளராக போல்டான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், டிக்கிலோனா படத்தில் நடித்த அனகாவுடன் சேர்ந்து "மகிழினி" என்ற இசை ஆல்பத்திற்காக இணைந்துள்ளனர். மகிழினியில் கௌரியும் அனகாவும் ஓரின சேர்க்கையாளர்களாக நடித்திருக்கிறார்கள். 
 
இருவருக்கும் இடையேயான உறவு குறித்து அவர்களது குடும்பத்தினரை புரிந்துகொள்ள வைப்பதற்காக எடுக்கும் முயற்சிகளில் அவர்கள் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதே ஆறு நாட்களில் படமாக்கப்பட்ட மகிழினி ஆல்பத்தின் கருவாகும். 
 
 
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் இணை இயக்குநராக பணியாற்றி வரும் மகிழினி ஆல்பத்தின் இயக்குநர் பாலசுப்ரமணியன் கூறுகையில், "எல்ஜிபிடி என்று அழைக்கப்படும் ஓரின சேர்க்கையாளர்களை பற்றி சமுதாயத்திற்கு புரிய வைக்க வேண்டும் என்பதுதான் மகிழினியின் பின்னணியில் உள்ள எண்ணம். சென்னையை சேர்ந்த மலர் (கௌரி) மற்றும் தில்லியில் இருந்து வரும் இந்துஜா (அனகா) பரதநாட்டியம் மீது கொண்ட பற்றால் சந்திக்கிறார்கள்.
 
ஒத்திகை ஒன்றின் போது அவர்களுக்குள் காதல் தீ பற்றுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பதை மகிழினி காண்பித்து இருக்கிறார் இயக்குனர். கோவிந்த் வசந்தாவின் இசை, மதன் கார்க்கியின் பாடல் வரிகள் மற்றும் கீர்த்தனா வைத்தியநாதனின் இசையமைப்பு ஆகியவை இந்த ஆல்பத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. 
 
இந்நிலையில், ட்ரசர்ஹன்ட் ஜானரில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ள வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ள கௌரி கிஷன் முதன் முறையாக நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், ஏக்கத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.