பீஸ்ட்-ல ஷார்ப்பான சம்பவம் இருக்கு..! - படத்தில் இணைந்த "டாக்டர்" பட நடிகர்கள்..!

 
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். 
 
மேலும் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 
 
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது.ஆனால் அங்கு சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், மழை காரணமாக படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் படக்குழு சென்னை திரும்பியது. 
 
தற்போது இந்த மாத இறுதியில் மீண்டும் ஜார்ஜியா சென்று மீதமுள்ள படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படம் தங்கம் வெட்டி, கடத்தும் கும்பலை மையப்படுத்தி உருவாகி வருகின்றது. 
 
நடிகர் விஜய் துப்பாக்கி படத்திற்கு பிறகு மீண்டும் ராணுவ வீரராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும், டாக்டர் படத்தில் காமெடி வில்லன்களாக தோன்றிய சுனில் ரெட்டி மற்றும் சிவ அரவிந்த் ஆகியோர் நடிகர் விஜய்யுடன் பயணிக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 

டாக்டர் படத்தில் இந்த இருவரின் நடிப்பும், காமெடியும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், இவர்கள் இருவரும் பீஸ்ட் படத்தில் இணைந்திருப்பது தரமான சம்பவம் இருப்பதை உறுதி செய்கிறது என்று ரசிகர்கள் மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.
பீஸ்ட்-ல ஷார்ப்பான சம்பவம் இருக்கு..! - படத்தில் இணைந்த "டாக்டர்" பட நடிகர்கள்..! பீஸ்ட்-ல ஷார்ப்பான சம்பவம் இருக்கு..! - படத்தில் இணைந்த "டாக்டர்" பட நடிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 12, 2021 Rating: 5
Powered by Blogger.