கௌதம் மேனன் நடிக்கும் அன்பு செல்வன் என ஒரு முதல் பார்வை போஸ்டர் இன்று (நவம்பர் 3) காலை முதல் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் பா.ரஞ்சித்தின் ட்விட்டர் பதிவை பகிர்ந்த இயக்குநர் கௌதம் மேனன், ''எனக்கு இது அதிர்ச்சியான செய்தி.
நான் நடிப்பதாக கூறப்படும் இந்தப் படம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. போஸ்டரில் இருக்கும் இயக்குநரை நான் சந்தித்தது கிடையாது. அவர் யார் என்று கூட எனக்கு தெரியாது.
தயாரிப்பாளருக்கு இந்த முதல் பார்வை போஸ்டரை வெளியிட பெரிய பெயர்கள் கிடைத்துள்ளன. இதனை மிக எளிதாக செய்ய முடிவது எனக்கு அதிர்ச்சி மற்றும் பயமுறுத்தக் கூடியதாக இருக்கிறது'' என்று விளாசியுள்ளார்.
இதனையடுத்து இயக்குநர் பா.ரஞ்சித் ட்விட்டர் பக்கத்தில் இருந்து தனது பதிவை நீக்கியுள்ளார்.