"வாவ்.. வேற லெவல்.." - வித்தியாசமான கர்ப்ப கால போட்டோ ஷூட் நடத்திய நீலிமா ராணி..!

 
சீரியல் நடிகை நீலிமா ராணி தனது கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நடிகை நீலிமா ராணி. 
 
தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நடிகை நீலிமா ராணி. 
 
தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 
 
 
அதோடு ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட பல சின்னதிரை தொடர்களிலும் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். விஜய் டிவி-யின் அரண்மனைகிளி சீரியலில் நடித்து வந்த நீலிமா ராணி, தனிப்பட்ட காரணங்களால் அதிலிருந்து விலகினார். 
 
 
சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, அதை நிர்வகித்தும் வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, நீலிமா ராணிக்கும் அவரது கணவர் இசைவாணனுக்கும் 12 வயது வித்தியாசமாம். காதலை முதலில் வெளிப்படுத்திய நீலிமா, இரு வீட்டாரின் சம்மதத்துடன், அவரை திருமணம் செய்துக் கொண்டார். 

 
இவர்களுக்கு அதிதி என்ற மகள் இருக்கிறார். தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்திருக்கும் நீலிமா, தனது கர்ப்ப கால புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
"வாவ்.. வேற லெவல்.." - வித்தியாசமான கர்ப்ப கால போட்டோ ஷூட் நடத்திய நீலிமா ராணி..! "வாவ்.. வேற லெவல்.." - வித்தியாசமான கர்ப்ப கால போட்டோ ஷூட் நடத்திய நீலிமா ராணி..! Reviewed by Tamizhakam on November 23, 2021 Rating: 5
Powered by Blogger.