‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த நடிகை ராகுல் பரீத் சிங், பிரபல ஆங்கில இதழ் ஒன்றின் அட்டைப் படத்திற்கு படு கவர்ச்சியாக போட்டோ போஸ் கொடுத்துள்ளார்.நடிகை ராகுல் ப்ரீத் சிங் ‘தடையற தாக்க’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதன் பின் ‘புத்தகம்’ என்ற படத்தில் நடித்தார். பின்னர் தமிழில் வாய்ப்பில்லாததால் தெலுங்கு படம் சென்றார். அங்கு பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.கடந்த ஆண்டு அவர் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்திருந்தார்.
அந்தப் படம் படு தோல்வியடைந்தது. அதையடுத்து தமிழில் கார்த்திக்கு ஜோடியாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறார்.
இவர் அடுத்ததாக சூர்யா படத்திலும், சிவகார்த்திகேயனின் படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சாட்ரிவாலி என்ற படத்தில் ஆணுறைகளை பரிசோதிக்கும் அழகியாக நடிக்கவுள்ளார்.
விதவிதமான ஆணுறைகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அதனை பயன்படுத்தும் போது எப்படியான உணர்வை தருகிறது என்பதை சோதனை செய்து ஆலோசனை கூறும் பெண்ணாக ராகுல் பரீத் நடிக்கிறார்.
இந்த படத்தில், பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகின்றது. கையில் பெரிய ஆணுறை பாக்கெட்டை வைத்திருக்கும் ராகுல் பரீத் சிங்-ஐ பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
0 கருத்துகள்