"திருமணம் செய்யாமலேயே.. அப்படி வாழ விருப்பம் உள்ளதா..?.." - யாரும் எதிர்பார்க்காத பதிலை கொடுத்த ரைசா..!


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரைசா வில்சன், லிவ்விங் டுகெதர் வாழ்க்கை எனக்கு ஓகே என்று கூறி இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். 
 
மாடலான இவர் இதற்கு முன்பே தனுஷ் நடித்திருந்த “வேலையில்லா பட்டதாரி 2“ படத்தில் நடிகை காஜோலுக்கு உதவியாளராகவும் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு நடிகை ரைசா வில்சன் “பியார் பிரேமா காதல்“ திரைப்படத்தில் நடித்திருந்தார். 
 
இப்படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்ஷுடன் “காதலிக்க யாருமில்லை“, நடிகர் விஷ்ணு விஷாலுடன் “எஃப்ஐஆர்“, நடிகர் பிரபுதேவாவுடன் “பொய்க்கால் குதிரை”, “திசேஸ்“ போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் நடிகை ரைசா வில்சன் ரசிகர்களுடன் வீடியோ உரையாடலில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் “லிவ்விங் டுகெதர் வாழ்க்கையில் விருப்பம் இருக்கிறதா..?. அதாவது, திருமணம் செய்யாமலேயே ஆணுடன் சேர்ந்து வாழ்வதற்கு உங்களுக்கு விருப்பம் உள்ளதா.? “ என கேள்வி எழுப்பியிருக்கிறார். 
 
இதற்குப் பதிலளித்த நடிகை ரைசா, “லிவ்விங் டுகெதர் ரிலேன்ஷிப் எனக்கு ஒகே தான். ஆனால் அதற்கு எனக்கு ஒரு காதலன் வேண்டுமே? அது இல்லாமல் நான் என்ன செய்ய முடியும். அதனால் அந்த வாழ்க்கையை கற்பனை செய்து கொள்கிறேன்“ என்று பதிலளித்துள்ளார்.