#எச்சப்பய_வெங்கட்பிரபு - கழுவி ஊத்தும் ரசிகர்கள்... - திடீரென ட்ரெண்டான சம்பவம்... - என்ன காரணம்-ன்னு பாருங்க..!

 
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து விரைவில் வெளியாக உள்ள படம் மாநாடு. டைம் லூப் கான்செப்ட் வைத்து வெளியாகும் இந்த படத்தின் மீது பலரும் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 
 
இவருடைய இயற்பெயர், வெங்கட்குமார் கங்கை அமரன் என்றாலும் இவர் வெங்கட் பிரபு என்ற பெயர் மூலம் அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகர் , திரைக்கதை ஆசிரியர் ஆவார். 
 
இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன். இவர், நாளை (நவம்பர் 7) தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இந்நிலையில், தான் டிவிட்டாில் #எச்சப்பய_வெங்கட்பிரபு என்ற டேக் ட்ரெண்டாகி வருகின்றது. என்ன ஆச்சு..? எப்போதும் கலகலப்பாக இருக்கும் வெங்கட்பிரபுவுக்கு எதுக்கு இப்படி ஒரு அடைமொழி என்று பலரும் குழம்பித்தான் போனார்கள். 
 
 
காரணம் என்னவென்றால்.. நாளை (நவம்பர் 7) தான் நடிகர் கமல்ஹாசனுக்கும் பிறந்தநாள். இந்நிலையில், மாயவரத்தான் என்ற ட்விட்டர் வாசி ஒருவர் கமல்ஹாசனுக்கு வழக்கமாக கொடுக்கும் புகழாரங்களை சொல்லி கடைசியாக வெங்கட் பிரபுவை தான் அப்படி அழைத்தது போல வெங்கட்பிரபுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். 
 
இதனை பார்த்த, வெங்கட் பிரபு, வழக்கம் போல.. நான் கூட வேற யாரையோ சொல்றீங்க-ன்னு நெனச்சிட்டேன்.. அப்புறம் தான் உள்குத்து இருக்குறது புரிஞ்சது என பதிலளிக்க கமல்ஹாசன் ரசிகர்கள் கடும் அப்செட். அவ்வளவு தான் திருவிழாக்கோலம் பூண்டுவிட்டது ட்விட்டர். 
 

வெங்கட்பிரபு கமல்ஹாசன் வஞ்சம் புகழ்ந்ததற்கு மன்னிப்பு கேட்டே ஆகணும் என சுற்றி வளைத்துள்ளனர் கமல்ஹாசன் ரசிகர்கள்.
#எச்சப்பய_வெங்கட்பிரபு - கழுவி ஊத்தும் ரசிகர்கள்... - திடீரென ட்ரெண்டான சம்பவம்... - என்ன காரணம்-ன்னு பாருங்க..! #எச்சப்பய_வெங்கட்பிரபு - கழுவி ஊத்தும் ரசிகர்கள்... - திடீரென ட்ரெண்டான சம்பவம்... - என்ன காரணம்-ன்னு பாருங்க..! Reviewed by Tamizhakam on November 06, 2021 Rating: 5
Powered by Blogger.