பாண்டவர் இல்லம் தொடர் மூலம் துருதுரு பெண்ணாக அனைவரின் வீட்டிலும் வலம்வந்துகொண்டிருப்பவர் ஆர்த்தி சுபாஷ். யூடியூப் பிளாட்ஃபார்மில் தொடங்கி தற்போது சீரியலில் மல்லிகா கதாபாத்திரத்தில் கலக்கிக்கொண்டிருக்கும் இவருடைய லேட்டஸ்ட் க்ளிக்ஸ் இங்கே.
சமீபத்தில் இவருடைய சில புகைப்படங்கள் மிகவும் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வந்தன. அதற்குக் காரணம், முகத்தில் வடு ஏதும் இல்லாமல் திரையில் பார்த்த ஆர்த்திக்கும் முகம் முழுக்க பருக்கள் கொண்டிருக்கும் ரியல் ஆர்த்திக்கு உள்ள வித்தியாசம்தான்.
இதைப் பற்றி அவரே ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார்.அதில், இந்த பருக்கள் மூலம் தான் சந்தித்த பிரச்சனைகளை விரிவாகப் பகிர்ந்துகொண்டார். “எனக்குச் சின்ன வயதிலிருந்தே முகத்தில் பருக்கள் ஏதும் வந்ததே இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நெற்றியில் சின்னதாக ஒரு பரு வந்தது. அதனைத் தெரியாமல் கிள்ளிவிட்டேன்.
இதுதான் என் முகம் முழுக்க பரவியதற்கான காரணம்.முகத்தில் வடுக்கள் என்றாலே கஷ்டம்தான். அதிலும் பெண்களுக்குக் குறிப்பாக மீடியா துறையில் இருப்பவர்களுக்கு முகம் மிகவும் முக்கியம். ஏகப்பட்ட நெகட்டிவ் ஃபீட்பேக்குகளை எதிர்கொண்டேன்.
அதுவே இப்படி இருக்கிறதே என்ற வருத்தம் என்னுள் நிறைய இருந்தது. 2019 முழுக்க ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டேன். பிறகு, எவ்வளவு நாள்தான் மறைத்துக்கொண்டிருப்பது என என் உண்மை முகத்தை உலகிற்குக் காட்டினேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், சினிமா ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் படு கிளாமரான உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.