இன்றைய கோச்சாரம் :
மேஷம் (Aries):
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்க வேண்டிய நாள். வழக்கமான பணிகளை மட்டும் செய்யவும்.
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் மூன்றாம் இடத்தில் மறைந்திருப்பதால், எதிலும் சற்று முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். பணவரவு சீராக இருக்கும். ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
ரிஷபம் (Taurus):
இன்று பிறரிடம் பேசும்போது கோபப்படாமல் பேசுவது சிறந்தது. உங்களைத் கோபப்படுத்தும் விதமாக யாரேனும் பேசினாலும் பொறுமையை கடைப்பிடிப்பது நன்மை பயக்கும்.
பிள்ளைகள் வழியில் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில், வியாபாரத்தில் சற்று கூடுதல் கவனத்துடன் இருப்பது லாபத்தைக் கொடுக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழக்கூடிய நாள்.
மிதுனம் (Gemini):
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வழக்கமான வேலைகளை மட்டும் செய்யவும். புதிய வேலைகளைச் செய்யும்போது நிதானமாக யோசித்து, முன்விளைவு பின்விளைவு ஆகியவற்றை பற்றி ஆழ்ந்த யோசனைக்கு பிறகு செய்யலாம். வாகனங்களில் பயணிக்கும்போது கவனம் தேவை.
பிள்ளைகள் வழியில் சில ஆடம்பர செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள். சகோதரர்கள் உதவுவார்கள். கூடுமானவரை செலவுகளை சுபச் செலவுகளாக மாற்றிக்கொள்ளுங்கள்.
கடகம் (Cancer):
எந்த விஷயத்திலும் முன்னேற்றைக்கு உடன் செயல்பட வேண்டிய நாள். குறிப்பாக குடும்பத்தினரிடம் அல்லது மூன்றாம் நபரிடம் ஏதேனும் வாக்கு கொடுக்கும்போது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து கூறுவது நன்மை பயக்கும்.
அவசரப்பட்டு எதையாவது கூறிவிட்டால் அதன் மூலம் பின்னாளில் சிக்கல் ஏற்படுவதற்கு உண்டான வாய்ப்பை இந்த நாள் காட்டுகிறது. கூடுமானவரை பொருளாதார மற்றும் வாக்குறுதி இந்த இரண்டு விஷயத்திலும் கவனமாக செயல்படுவது நன்மை தரும். வாகனங்களில் பயணிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிப்பது நன்மை பயக்கும்.
சிம்மம் (Leo):
இன்று உங்களுடைய வாழ்க்கை துணை மற்றும் குடும்பத்தினரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அவர்கள் செய்ததுதான் தவறு, நீங்கள் செய்ததுதான் சரி என்றாலும் கூட அமைதியை கடைப்பிடிப்பது பல நன்மைகளை கொடுக்கும்.
ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது கட்டாயம். உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். எதிரிகளின் தொல்லை நீங்கி மனம் தெளிவு வரும் நாளாக இந்த நாள் காட்டுகிறது.
கன்னி (Virgo):
இந்த கடன் தொல்லைக்கு முடிவே இல்லையா? நன்றாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் ஸ்பீட் பிரேக்கர் போட்டால் பரவாயில்லை, இப்படிக் கேட் போட்டுத் தடுத்து விட்டார்களே என்று புலம்புவது கேட்கிறது.
காத்திருங்கள், ஊர் வியக்கும் அளவுக்கு நல்ல பல விஷயங்களை உங்கள் வாழ்க்கையில் நடத்த உங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் கடவுள் என்பதை உளமார உணருங்கள்.
எடுத்தோம் கவுத்தோம் என எந்த விஷயத்தையும் செய்ய வேண்டாம். தவிர்க்க முடியாத செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மாலை நேரத்தில் மனதுக்கு மகிழ்ச்சியான விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.
துலாம் (Libra):
ராசியிலேயே சந்திரன் அமர்ந்திருக்கக்கூடிய மிகச் சிறப்பான நாள். எதிர்காலம் குறித்த முடிவுகள் எடுப்பதில் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
எதிரிகள், தொழில் போட்டியாளர்கள் விலகி ஓடுவார்கள். அதே சமயம் மறைமுக எதிர்ப்புகளும் இருந்து கொண்டே தான் இருக்கும்.
பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை துணை விஷயத்தில் பொறுமை கடைபிடிப்பது நல்லது. கோபப்பட்டு பேச வேண்டாம். இரவு நேரத்தில் தூக்கமின்றி தவிக்கும் துலாம் ராசியினர் மாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
கெட்ட கனவுகள் அதிகம் வரும் பட்சத்தில் மூளை குறைபாடு உள்ள குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு வண்ண ஆடைகள், பால் போன்றவற்றை தானமாக கொடுத்து உதவி செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
விருச்சிகம் (Scorpio):
எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் பார்த்துக்கலாம் என்ற ஒரு தைரியம் உங்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். பிள்ளைகள் வழியில் ஆடம்பர செலவுகள் ஏற்படும்.
வண்டி வாகனங்களில் பயணிக்கும்போது நீண்ட தூரம் பயணம் செல்லும்போதும் கவனமாக செல்லவும். வாழ்க்கை துணை, பொருளாதார விஷயத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. உடல் ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு (Sagittarius):
ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் இருப்பதை உணர்வீர்கள். கவலை வேண்டாம். உங்கள் உடல் நலலில் என்ன பிரச்சனை என்பதை தகுந்த மருத்துவரை சந்தித்து தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
பயணத்தின்போது கவனம் முக்கியம். வாழ்க்கை துணை வழியில் செலவுகள் ஏற்படும். வாழ்க்கை துணையிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். அதற்கான சரியான நாளாக இந்த நாள் இல்லை. எதிலும் நிதானமாக முடிவு எடுக்க வேண்டிய சூழல் இருக்கிறது. புதிதாக இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் வாங்கக்கூடிய யோசனை ஏற்படும்.
மகரம் (Capricorn):
நீண்ட காலம் சேமித்து வைத்த ஏதாவது ஒரு தொகையை தொழில் முதலீட்டுக்காக எடுக்கலாமா..? என்ற சிந்தனை ஏற்படும். மேலும் வியாபாரத்தில் கிடைக்கக்கூடிய லாபத்தைக் கொண்டு வீடு, வாகனம் வாங்கலாமா..? என்ற முயற்சிகளை எடுப்பீர்கள்.
தொழில், வியாபாரம் ஆகியவற்றில் இருந்து வந்த சிக்கல்களை நண்பர்களின் உதவியாள் தீர்க்கக்கூடிய நாளாக அமைகிறது. அரசாங்கத்தின் வழியில் இருந்து வரக்கூடிய ஆதாயங்கள் எந்த தடையும் இன்றி நேரடியாக கிடைக்கப்போகிறது. இதன், காரணமாக மகிழ்ச்சியான நிலையில் காணப்படுவீர்கள்.
கும்பம் (Aquarius):
உங்களுக்கு சிக்கலைக் கொடுத்த, துரோகம் செய்த நபருக்கு உதவி செய்யக்கூடிய சூழல் ஏற்படுகிறது. வியாபாரம், கட்டுமான துறையில் வெற்றி காத்திருக்கிறது. அரசு வழியில் கிடைக்கவேண்டிய டென்டர்கள், ஒப்பந்தங்கள் எந்த தடையும் இல்லாமல் கைக்கு வந்து சேரும்.
ஏற்றுமதி தொழிலில் அபரிபிதமான பலன்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வெளியூரில் தங்களுடைய நிறுவனத்தின் கிளையை தொடங்கலாமா என்ற யோசனை. மேலும் அதற்கான முன்னெடுப்புகளையும் ஆலோசனைகளையும் செய்யக்கூடிய சிறப்பான நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது.
மீனம் (Pisces):
நீங்கள் இழந்த பொருள் ஒன்று இன்று உங்கள் கைக்கு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. வரவுகள் அதிகரிப்பதால் சேமிப்பும் அதிகரிக்கும்.
தேவையற்ற செலவு என்றால் அந்த இடத்திலேயே வெட்டி வீசி விடுவது நல்லது. வாங்கலாமா வேண்டாமா, செய்யலாமா கூடாதா என்று யோசனைக்கு செல்ல வேண்டாம். தற்போதைய சூழலில் இது தேவையா என்ற ஒரே கேள்வி தான் தேவை என்றால் வாங்குங்கள் தேவை இல்லை என்றால் தவிர்த்து விடுங்கள்.
தேவையற்ற பொருட்களை வாங்குவதால் பின்னால் பொருளாதார பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக காட்டுகிறது. அரசு ஊழியர்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்து இருந்த வேலை மாறுதல் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக தெரிகிறது. இன்று மதியம் வரை சந்திராஷ்டமம் இருக்கின்ற காரணத்தினால் எதுவுமே சற்று எச்சரிக்கையாக தலைநகர் தங்கள் நல்ல நாள்.
இந்த பலன்களை உங்களுக்காக தொகுத்து வழங்கியது உங்கள் ஜோதிடர்:சேலம் முத்துக்குமார்.
















