இன்றைய கோச்சாரம் :
மேஷம் (Aries):
உணர்ச்சி வசப்படாமல், பொறுமையுடன் செயல்படவும். கடந்த கால சங்கடங்கள் நினைவுக்கு வரலாம். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுங்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் ஏற்படலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும். தென் கிழக்கு திசை, 5ம் எண், பச்சை நிறம் அதிர்ஷ்டம்.
ரிஷபம் (Taurus):
குடும்பம் மற்றும் சமூகத்தில் சாதகமான சூழல். வியாபாரத்தில் புதிய நட்புகள் கிடைக்கும். அரசாங்க பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய செயல்களில் ஆர்வம் காட்டுவீர்கள். தெற்கு திசை, 6ம் எண், மின் மஞ்சள் நிறம் அதிர்ஷ்டம்.
மிதுனம் (Gemini):
விரும்பிய காரியத்தை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை. உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மேற்கு திசை, 7ம் எண், வெளிர் மஞ்சள் நிறம் அதிர்ஷ்டம்.
கடகம் (Cancer):
கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். போட்டிகள் நிறைந்த நாள். தெற்கு திசை, 9ம் எண், இளஞ்சிவப்பு நிறம் அதிர்ஷ்டம்.
சிம்மம் (Leo):
நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் கவனம் செலுத்துங்கள். சேமிப்பு மேம்படும். சுப காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். மேற்கு திசை, 8ம் எண், அடர் நீல நிறம் அதிர்ஷ்டம்.
கன்னி (Virgo):
சிறு தூர பயணங்களால் தெளிவு கிடைக்கும். அக்கம் பக்கத்தாரின் ஆதரவு கிடைக்கும். துணிச்சலாக செயல்படுவீர்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்வான வாய்ப்புகள் கிடைக்கும். தென் கிழக்கு திசை, 4ம் எண், மஞ்சள் நிறம் அதிர்ஷ்டம்.
துலாம் (Libra):
உறவினர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பதில் இருந்த சிக்கல்கள் நீங்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுங்கள். தனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தெற்கு திசை, 8ம் எண், வெளிர் நீல நிறம் அதிர்ஷ்டம்.
விருச்சிகம் (Scorpio):
குடும்ப விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். கலைத்துறையில் முயற்சி வெற்றி பெறும். வாக்கு விஷயத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சிறு மாற்றங்கள் ஏற்படலாம். தியானம் மூலம் மன அமைதி உண்டாகும். கிழக்கு திசை, 5ம் எண், சில்வர் நிறம் அதிர்ஷ்டம்.
தனுசு (Sagittarius):
அறிமுகம் இல்லாத நபர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல் ஏற்படும். வர்த்தக முதலீடுகளை தவிர்க்கவும். வெளி உணவுகளை தவிர்க்கவும். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். மேற்கு திசை, 7ம் எண், பச்சை நிறம் அதிர்ஷ்டம்.
மகரம் (Capricorn):
சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். சமூக பணிகள் செய்வதன் மூலம் கௌரவம் கிடைக்கும். கடல் பிரயாணம் வாய்ப்புகள் கிடைக்கும். வேளாண் பணிகளில் லாபம் கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். வடகிழக்கு திசை, 4ம் எண், இளம் பச்சை நிறம் அதிர்ஷ்டம்.
கும்பம் (Aquarius):
குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். வெளிவட்டார பழக்கங்கள் நல்ல முறையில் அமையும். அரசு உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய சூழல் ஏற்படும். மேற்கு திசை, 8ம் எண், நீல நிறம் அதிர்ஷ்டம்.
மீனம் (Pisces):
உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். சுப காரியம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். பிரபலமானவர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் ஆதாயம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வடக்கு திசை, 6ம் எண், நீல நிறம் அதிர்ஷ்டம்.
இந்த பலன்களை உங்களுக்காக தொகுத்து வழங்கியது உங்கள் ஜோதிடர்:சேலம் முத்துக்குமார்.