சன் டிவியில் ஜெயலலிதா அம்மா பற்றி அந்த தகவலை நேரலையில் சொல்ல சொன்னாங்க.. குப்புன்னு வியர்துடுச்சு.. உமா பத்மநாபன் பகீர்..!


பிரபல செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான உமா பத்மநாபன், தனது ஆரம்பகால மீடியா பயணம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல்வேறு சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். 

குறிப்பாக 1996 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளை நேரலையில் வாசித்துக்கொண்டிருந்த போது தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத பதட்டமான அனுபவம் பற்றி அவர் மனம் திறந்து பேசியுள்ளார். 

Source : Insta / Uma Padmanaban


உமா பத்மநாபன் அந்த அனுபவத்தை விவரிக்கும்போது, "அப்போதுதான் சன் டிவி தன்னுடைய ஒளிபரப்பைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்திருந்தது. அந்த நேரத்தில் தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவுகளை நேரலையில் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அப்போதெல்லாம் நேரலை என்பது மிகப்பெரிய விஷயம். 

இப்போது எதற்கெடுத்தாலும் நேரலை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் 96-இல் நேரலையாக ஒரு விஷயத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்வது என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. நேரலையில் பேசுவது அப்படியே ஒளிபரப்பாகும். 

Source : Insta / Uma Padmanaban

இப்போது பல செய்தி சேனல்கள் நேரலை ஒளிபரப்பு கிடையாது. அரை மணி நேரம் முன்னரே பதிவு செய்யப்பட்ட வீடியோவை தான் நேரலை என வெளியிடுகிறார்கள். 99 சதவீதம் இதுதான் நடக்கிறது. பொது வெளியில் இருந்தால் அதனை நிறைவு செய்கிறார்கள். 

ஆனால் ஸ்டூடியோ நடக்கக்கூடிய விஷயங்கள் நேரடியாக வருவது கிடையாது. குறைந்தபட்சம் அரை மணி நேரத்திற்கு முன்பே பதிவு செய்யப்பட்ட காட்சிகளைத் தான் நேரலை என்று பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் 96-இல் நாம் என்ன பேசுகிறோமோ அது அப்படியே நேரடியாக தொலைக்காட்சியில் வரும். 

அதை எடிட் செய்வது என்பது கடினம். அப்போது பெரிய வசதிகள் இல்லை" என்று 1996 காலகட்டத்தின் நேரலை ஒளிபரப்பு முறையை விளக்கினார். தொடர்ந்து அந்த பதட்டமான தருணத்தை விவரித்த அவர், "அப்படி 96 தேர்தல் முடிவுகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். 

அந்த நேரத்தில் ஜெயலலிதா அவர்கள் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்து விட்டார் என்று செய்தி எனக்கு கொடுக்கப்படுகிறது. அதை படிக்கும் போது நான் ஏதேனும் தவறாக படிக்கிறேனா அல்லது ஏதாவது தவறாக எழுதி கொடுத்து விட்டார்களா என்று எனக்கு எதுவுமே புரியவில்லை. 

சர்ச்சைக்குறிய கிரிக்கெட் வீரருடன் நெருக்கமாக சீரியல் நடிகை பிரவீனா..! புகைப்படங்கள் வைரல்..!

சர்ச்சைக்குறிய கிரிக்கெட் வீரருடன் நெருக்கமாக சீரியல் நடிகை பிரவீனா..! புகைப்படங்கள் வைரல்..!

எனக்கு ஒரு நிமிடம் உயிரு போயிற்றுப் போய்விட்டது. ஏனென்றால் அவர் தோற்றுவிட்டார் என நேரலையில் சொல்லி அது தவறாக இருந்தால் நாளை தனிப்பட்ட முறையில் எனக்கு ஏதேனும் பிரச்சினை வருமா என்ற பயமெல்லாம் இருந்தது. 

எனக்கு ஒரு நிமிடம் வியர்த்து விட்டது. இந்த செய்தி உண்மைதானா என்று தெரியாமலேயே எழுதிக் கொடுத்ததை அப்படியே படிக்க ஆரம்பித்து விட்டேன். இப்போது சொல்வதற்கு அவ்வளவு எளிமையாக இருக்கலாம். ஆனால் அந்த இடத்தில் நான் பேசக்கூடிய விஷயத்தை லட்சக்கணக்கான மக்கள் தொலைக்காட்சி வழியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

1996 Tamil Nadu Election Result Newspaper Clipping

அப்போது நிறைய சேனல் எல்லாம் கிடையாது. சன் டிவி மட்டும் தான் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு செய்தியை படிக்க வேண்டுமா என்ற ஒரு பதட்டம் பயம் என்னை ஆட்கொண்டது. 

அதன் பிறகு அது உண்மைதான் என்று தெரிந்த பிறகு கொஞ்சம் ஆசுவாசம் இருந்தேன். அந்த செய்தியை படிக்கும் போதும் படித்து முடித்து விட்ட பிறகு ஒரு அரை மணி நேரங்களுக்கு எனக்கு அந்த பதட்டமே குறையவில்லை. 

Source : Insta / Uma Padmanaban

அப்படி ஒரு செய்தியை கொடுத்து என்னை படிக்க சொன்னார்கள். ஆனால் அது உண்மையான செய்தி தான் என தெரிந்த பிறகு ஆஸ்வாசமானேன்," என்று அந்த அனுபவத்தை விவரித்தார். செய்தி வாசிப்பாளர் உமா பத்மநாபன் பகிர்ந்த இந்த அனுபவம், நேரடி ஒளிபரப்பின் சவால்களையும், குறிப்பாக முக்கியமான அரசியல் நிகழ்வுகளை நேரலையில் அறிவிக்கும்போது ஏற்படும் அழுத்தத்தையும் உணர்த்துவதாக இருக்கிறது. 

Source : Insta / Uma Padmanaban

தொழில்நுட்பம் வளராத அந்தக் காலத்தில், ஒரு சிறிய தவறு கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடுமோ என்ற பயம் இருந்தது இயல்பானதே. உமா பத்மநாபனின் இந்த நேர்காணல், அக்காலகட்டத்து ஊடகப் பணியின் அழுத்தத்தையும், செய்தி வாசிப்பாளர்களின் பொறுப்புணர்வையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.