டிராகன் வெற்றி.. விக்னேஷ் சிவன் வெறித்தனமான பதிவு.. இதை பாத்தா டிராகன் வெற்றிக்கு போட்ட மாதிரி தெரியல..


கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, குறுகிய காலத்திலேயே சென்சேஷனல் ஹிட் ஹீரோவாக உயர்ந்தவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளியை தொடர்ந்து லவ் டுடே, டிராகன் என ஹாட்ரிக் வெற்றிப் படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இளம் நாயகனாக உருவெடுத்துள்ளார். 

சமீபத்தில் வெளியான டிராகன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு பிரம்மாண்டமானது. அதுமட்டுமின்றி, பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரே இப்படத்தை பாராட்டி பேசியது டிராகன் படத்தின் வெற்றிக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

 

vignesh shivan on dragon success meet

சமீபத்தில், LIK படக்குழுவினர் டிராகன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர். ஹாட்ரிக் வெற்றியால் பிரதீப் ரங்கநாதன் தற்போது திரையுலகில் முன்னணி ஹீரோக்களின் வரிசையில் இடம் பிடித்துவிட்டார்.  

லவ் டுடேவின் இமாலய வெற்றி: குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் வெற்றி பெறுவது அரிதான ஒன்று. ஆனால், பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் வெறும் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்து மாபெரும் வெற்றி பெற்றது. 

vignesh shivan on dragon success meet

விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை இப்படம் சந்தித்தாலும், இளைஞர்கள் மத்தியில் இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான "என்னை விட்டு உயிர் போனாலும்", "அவள் என்னை பார்த்தாலே", "கிஸா" போன்ற பாடல்கள் அதிரி புதிரி ஹிட்டடித்தன.

 90ஸ் கிட்ஸ் முதல் 2K கிட்ஸ் வரை அனைத்து தரப்பினருக்கும் பிடித்த ஃபேவரட் டோனாக லவ் டுடே பாடல்கள் மாறின. பிரதீப் ரங்கநாதனே இயக்கி நடித்திருந்த இப்படம், இளைஞர்களை கவரும் காமெடி காட்சிகள் நிறைந்த கலகலப்பான படமாக அமைந்தது.  

பக்கத்து வீட்டு பையன் அந்தஸ்து - டிராகன் வசூல் வேட்டை: லவ் டுடே படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் தனது கல்லூரி நண்பர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் "டிராகன்" படத்தில் நடித்தார்.

vignesh shivan on dragon success meet

இந்த படம் வெளியான வெறும் 5 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டி தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை வாரி வழங்கியது. பிரதீப் ரங்கநாதனை பார்த்த ரசிகர்கள், பக்கத்து வீட்டு பையன் போல இருப்பதாகவும், அவரது நடிப்பு தனுஷ் மற்றும் பிரபுதேவாவை பிரதிபலிப்பதாகவும் கருத்து தெரிவித்தனர். 

இளம் இயக்குனர்களின் நம்பிக்கை நாயகனாக பிரதீப் ரங்கநாதன் தற்போது வளர்ந்து வருகிறார். தனுஷ் இயக்கத்தில் வெளியான "NEEK" படத்திற்கு கிடைக்காத வரவேற்பு "டிராகன்" படத்திற்கு கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

vignesh shivan on dragon success meet

விறுவிறுப்பான திரைக்கதை, சென்டிமென்ட் காட்சிகள், காதல் தோல்வி என கலகலப்பாக டிராகன் படம் ரசிகர்களை கவர்ந்தது. கல்வியை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டதால், அனைத்து தரப்பினருக்கும் பிடித்த படமாக டிராகன் மாறியது. 

திரைப்படம் வெளியான நாள் முதல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தற்போது முன்னணி இயக்குனர்களின் வரிசையில் இணைந்துள்ளார்.  

vignesh shivan on dragon success meet

ஷங்கர் பாராட்டு மழை: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், டிராகன் படத்தை பாராட்டி பேசியது இப்படத்தின் வெற்றிக்கு மேலும் பெருமை சேர்த்தது. இதற்கு பிரதீப் ரங்கநாதன் நன்றி தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.  

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி & ஹாட்ரிக் வெற்றிக்கு காத்திருக்கும் பிரதீப்: பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் "லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி" (LIK) படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட முன்னணி நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. 

அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். டிராகன் படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு காதல் பாடலும் பாடியுள்ளார். அந்த பாடலை நடிகர் சிம்பு பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. தான் பாட்டு எழுத காரணம் சிம்பு தான் என்றும், அவர் கொடுத்த ஊக்கம் தான் தன்னை பாடல்கள் எழுத வைத்ததாகவும் விக்னேஷ் சிவன் டிராகன் பட விழாவில் கூறியிருந்தார். 

"லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி" திரைப்படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தற்போது டிராகன் படத்தின் வெற்றியை LIK படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, "டிராகன் படத்தின் வெற்றியை கொண்டாடும் நேரத்திற்காக காத்திருந்தோம்.

vignesh shivan on dragon success meet

பிரதீப் ரங்கநாதன் இந்த வெற்றிக்கு தகுதியானவர் தான். பிரதீப் மேலும் பல உயரங்களை தொட வேண்டும். சொல்லி வைத்த மாதிரி சீறும் டிராகன். பிளாக்பஸ்டர் திரைப்படமாகவும், வசூல் சாதனை செய்து கொண்டிருக்கும் டிராகன் வெற்றியை LIK படக்குழுவினருடன் கொண்டாடினோம். 

பிரதீப் பயர் ஆன பெர்பாமென்ஸை கொடுத்துள்ளார். மக்களுக்கு பிடித்த படமாகவும் மாறியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். பிரதீப் ரங்கநாதன் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து, தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருவது உறுதி. அவரது அடுத்த படமான "லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி" படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.