இதுல எது உண்மை..? ஜோதிகா ஒன்னு சொல்றாங்க.. சூரியா ஒன்னு சொல்ட்ராரே.. கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ரெட்ரோ படம் வரும் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. 
 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 
 
சூர்யா தற்போது தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கடந்த ஆண்டு சூர்யா தனது குடும்பத்துடன் மும்பைக்கு ஷிஃப்ட் ஆனார். இந்நிலையில், சூர்யா தான் மும்பைக்கு ஷிப்ட் ஆக என்ன காரணம் என்பதை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 
 
 
சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். சூர்யா மற்றும் ஜோதிகா என இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்கள். மேலும் அவர்கள் மும்பைக்கு குடும்பமாக குடி பெயர்ந்து விட்டார்கள். 
 
இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. அதாவது ஜோதிகா தனது அம்மாவுடன் நேரம் செலவழிக்க திட்டமிட்டு மும்பைக்கு போயுள்ளதாக கூறப்பட்டது. அதேபோல், சிவக்குமாருக்கும் ஜோதிகாவுக்கும் இடையில் பிரச்னை, அதனால்தான் ஜோதிகா வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்ற பேச்சும் உலா வந்தது. இது மட்டும் இல்லாமல், சூர்யா பாலிவுட் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். 
 
அதனால்தான் மும்பைக்கு குடிபெயர்ந்து விட்டார். இது மட்டும் இல்லாமல், சூர்யா நடிக்க கமிட் ஆன படமான வாடிவாசல் படத்தில் நடிக்க, அவர் வளர்க்கும் காளையையும் சென்னையில் இருந்து மும்பைக்கு கொண்டு சென்று வளர்த்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது. 
 
 
அதாவது இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஹிந்தி: தமிழ் நாட்டு அரசியல் களத்தில் தற்போது அரசு பள்ளிகளில் மூன்றாவது மொழி கற்பிக்கப்பட வேண்டும் என மத்திய பாஜக அரசும், தமிழ்நாட்டில் என்றைக்கும் இருமொழிக் கொள்கை தான் என திமுக அரசும் அதன் கூட்டணி கட்சிகளும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தெரிவித்து வருகிறார்கள். 
 
இதனால் தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகிறது. இப்படியான நிலையில் சூர்யா குடும்பத்துடன் மும்பைக்கு போக என்ன காரணம், என்பதை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். 
 
சூர்யா: அதாவது, "எங்கள் குழந்தைகளின் படிப்புக்காக தான் நாங்கள் குடும்பத்துடன் மும்பைக்கு குடி பெயர்ந்தோம். சென்னையை காட்டிலும் மும்பையில் அதிகப்படியான சர்வதேச பள்ளிகள் இருப்பதால்தான் நாங்கள் மும்பைக்கு குடிபெயர்ந்தோம்" எனக் கூறுகிறார். 
 
 
இவரது இந்த பேட்டி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இணையவாசிகள் மற்றும் பாஜகவினர் சூர்யா, தனது குழந்தைகளின் படிப்புக்காக தான் மும்பைக்கு வந்தோம் எனக் கூறுகிறார். 
 
ஆனால், ஜோதிகா தனது அம்மாவுடன் இருக்க வேண்டும் என்பதற்காக குடிபெயர்ந்ததாக கூறுகிறார். இதில் எது உண்மை..? என ட்ரோல் செய்து வருகிறார்கள். 
 
சூர்யாவின் இந்த பதில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அவரது ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், சூர்யா தனது குழந்தைகளின் படிப்புக்காக மும்பைக்கு சென்றது உண்மைதான் என்று கூறுகின்றனர். 
 
இன்னும் சிலர், ஜோதிகாவின் விருப்பத்திற்காகவே சூர்யா மும்பைக்கு சென்றதாக நம்புகின்றனர். எது எப்படியிருந்தாலும், சூர்யாவின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை.