பிரபல நடிகை சுகன்யா 80களில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவர்.
குடும்பப் பாங்கான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி இளசுகளை சூடேற்றி தூக்கத்தை கெடுக்கும் கிளாமர் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி இறங்கி அடிப்பதில் நடிகை சுகன்யாவுக்கு நிகர் சுகன்யா தான்.
அப்படி தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சுகன்யா ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்.
அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவிலேயே செட்டிலாக சென்று விட்டார்.
ஆனால், அங்கே அவரால் தொடர்ந்து வாழ்க்கையை நகர்த்த முடியவில்லை. இதற்கு பிறகு மீண்டும் திரும்பி வந்துவிட்ட நடிகை சுகன்யா கணவரை விவாகரத்து செய்ய முடிவுக்கு சென்றார். விவாகரத்தும் பெற்று விட்டார்.
இவருடைய விவாகரத்துக்கு பலரும் பல்வேறு காரணங்களை கூறுகிறார்கள். ஆனால், சாப்பாடு பரிமாறுவதற்கு ஒரு ஆள்,, ஆடைகளை துவைத்து கொடுப்பதற்கு ஒரு ஆள்.. தலை சீவி விடுவதற்கு ஒரு ஆள்.. சாப்பாடை ஊட்டி விடுவதற்கு ஒரு ஆள்.. வெளியில் கிளம்பும் போது செருப்பை எடுத்து வைப்பதற்கு ஒரு ஆள்.. இந்த பக்கம் திரும்பினால் உதவிக்கு ஒரு ஆள்.. அந்தப் பக்கம் திரும்பினால் உதவிக்கு ஒரு ஆள்.. என இப்படி மிகவும் சொகுசாக வாழ்ந்தவர் நடிகை சுகன்யா.
அமெரிக்காவுக்கு சென்ற பிறகு இந்த அனைத்து வேலைகளையும் அவரே செய்ய வேண்டும் என்ற சூழ்நிலையில் அவரால் அந்த வாழ்க்கையை தொடர்ந்து நகர்த்த முடியவில்லை.
அது மட்டும் இல்லாமல் சாப்பாடு கூட இல்லாமல் இருந்து விடுவார். ஒரு நடிகையாக கேமரா ஆக்சன் என்ற அந்த வார்த்தைகளை கேட்காமல் அவரால் முழுமையாக சினிமாவை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லை.
விவாகரத்து பெற்ற வேகத்தில் மீண்டும் சீரியல் சினிமா என பிஸியாக நடிக்க தொடங்கி விட்டார். நடிகை சுகன்யாவுக்கு மட்டுமல்ல பல நடிகைகள் விவாகரத்து பெறுவதற்கு இதுவும் ஒரு காரணம் என பதிவு செய்திருக்கிறார் பிரபல பத்திரிகையாளரும் சர்ச்சைக்குரிய நடிகர் ஆன பயில்வான் ரங்கநாதன்.
0 கருத்துகள்