40 வயதாகும் வரலட்சுமி சரத்குமார் சொத்து மதிப்பு எள்ளவு தெரியுமா..?

தமிழ் சினிமாவின் நாட்டாமை சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் திரையுலகில் நுழைந்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். 

தனது துடிப்பான நடிப்பு மற்றும் தனித்துவமான கதாபாத்திர தேர்வால் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்த வரலட்சுமி, இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

அவரது திரைப்பயணம், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. வரலட்சுமி. 

சினிமாவில் நடிக்க முதலில் அவரது பெற்றோரிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லையாம். 

இதனால் முன்னணி இயக்குனர்களின் பல பட வாய்ப்புகளை அவர் தவறவிட்டார். இருப்பினும், விடா முயற்சியின் காரணமாக வீட்டில் சம்மதம் பெற்று, நடிகர் சிம்புவுடன் 'போடா போடி' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 'போடா போடி' படத்திற்கு பின்னர், வரலட்சுமி தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்தார். 

'தாரை தப்பட்டை', 'சர்கார்', 'விக்ரம் வேதா', 'சத்யா', 'சண்டக்கோழி 2' போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். 

கடைசியாக இவர் நடிப்பில் நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்த 'மதகஜராஜா' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

தற்போது, வரலட்சுமி தளபதி விஜய்யின் கடைசி படமாக கூறப்படும் 'ஜன நாயகன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் இணைந்திருப்பது அவரது திரை வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. 

கடந்த ஆண்டு, மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் வரலட்சுமி. 

திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடும் வரலட்சுமிக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அதே சமயத்தில், அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்களும் இணையத்தில் பரவி வருகின்றன. ஒரு படத்திற்கு சுமார் 70 லட்சம் வரை சம்பளம் வாங்கும் வரலட்சுமி, மொத்தம் 25 கோடி ரூபாய் வரை சொத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும், அவரது கணவர் நிக்கோலாய்க்கு சுமார் 100 கோடி ரூபாய் வரை சொத்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நாட்டாமை சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்து, தனது திறமையாலும் முயற்சியாலும் முன்னணி நடிகையாக உயர்ந்த வரலட்சுமி, தற்போது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 

திரைத்துறையில் மேலும் பல உயரங்களை தொட்டு சாதனை படைக்க வாழ்த்துக்கள்!