சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் டாப் 5 இடத்தைப் பிடித்த அவர், பின்னர் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறினார்.
ஒருசில ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, சமீப காலமாக தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் அவர் இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக ஆட்டம் போட்ட ஒரு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டார்.
தற்போது கவர்ச்சியான லுக்கில் எடுத்த மயக்கும் புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வரும் பூஜா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் யாரும் எதிர்பாராத ஒரு விஷயத்தை ஓப்பனாக பேசியுள்ளார்.
அந்த பேட்டியில், "நான் ஒரு முறை தொடர்ந்து 4 நாட்கள் குளிக்காமல் இருந்திருக்கேன்" என்று அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். இது பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
பிரபலங்கள் தங்களது தனிப்பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசுவது அரிதான நிலையில், பூஜா இப்படி ஒரு விஷயத்தை கூறியிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள பூஜா, தற்போது தனது இந்த புதிய அவதாரத்தின் மூலம் மேலும் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அவரது இந்த ஓப்பனான பேச்சுக்கு ரசிகர்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.