"துப்பாக்கி" படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது யாருன்னு தெரியுமா..? தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..!

அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, வேலாயுதம் என அடுத்தடுத்து படுதோல்வி படங்கள் நடிகர் விஜய்யை நிலைகுலைய வைத்த நேரம் அது. 

சினிமா வாழ்க்கையில் வெற்றிக்கு ஏங்கித் தவித்தவருக்கு, கொலைப் பசியில் இருந்தவனுக்குக் கிடைத்த பிரியாணி போல அமைந்ததுதான் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய "துப்பாக்கி" திரைப்படம். 

இதற்கு நடுவில் காவலன், நண்பன் போன்ற படங்கள் வெளியானாலும், அவை இரண்டும் ரீமேக் படங்கள் என்பதால் விஜய்யின் திரையுலக வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமையவில்லை. 

விஜய் எந்த அடிப்படையில் கதைகளைத் தேர்வு செய்கிறார் என்ற விமர்சனங்கள் பலமாக எழுந்தன. ஆனால், இவை அனைத்தையும் தூள் தூளாக்கி உடைத்தெறிந்து வசூல் சாதனையும் நிகழ்த்தியது "துப்பாக்கி" திரைப்படம். 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், வசூல் மன்னனாகவும் விஜய் இன்று வலம் வருகிறார் என்றால், அதற்கு அடித்தளமாக அமைந்தது "துப்பாக்கி" திரைப்படம்தான். 

விஜயின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்ட ஒரு திரைப்படம் அது. "துப்பாக்கி" திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டு சாதனை படைத்தது. இப்படி விஜய்க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்தது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் என்பது பலரும் அறியாத தகவல். 

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் முதலில் "துப்பாக்கி" படத்தின் கதையை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரிடம் தான் கூறினாராம். அக்ஷய் குமாருக்கும் கதை மிகவும் பிடித்துப்போய் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம். 

ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ளது. அந்த சமயத்தில்தான் இயக்குனர் முருகதாஸ், விஜய்யிடம் இந்தக் கதையை சொல்லியிருக்கிறார். 

விஜய்க்கும் கதை மிகவும் பிடித்துப்போகவே, முருகதாஸ் அக்ஷய் குமாரிடம் சென்று தமிழில் விஜய்யை வைத்து இந்த படத்தை எடுக்கலாமா என்று அனுமதி கேட்டுள்ளார். அதற்கு அக்ஷய் குமார், "உங்களுடைய இஷ்டம். நான் இப்போது மிகவும் பிஸியாக இருக்கிறேன். 

இன்னும் ஒரு வருடத்திற்கு கால்ஷீட் கொடுப்பது கடினமான விஷயம். அதனால் நீங்கள் படத்தை முடித்துவிட்டே வாருங்கள்" என்று கூறிவிட்டாராம். அதன் பின்பு "துப்பாக்கி" படத்தில் விஜய் நடிக்க, படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு சில மாதங்கள் கழித்து முருகதாஸ், "துப்பாக்கி" படத்தை ஹிந்தியில் "ஹாலிடே" என்ற பெயரில் ரீமேக் செய்யத் தொடங்கினார், அந்த படத்தில் அக்ஷய் குமாரே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒருவேளை அன்று அக்ஷய் குமார் கால்ஷீட் கொடுத்திருந்தால், "துப்பாக்கி" படத்தில் முதலில் அவர்தான் நடித்திருப்பார். விஜய் நடித்த "துப்பாக்கி" திரைப்படம் எப்படி மிகப்பெரிய வெற்றி பெற்றதோ, அதேபோல அக்ஷய் குமார் நடித்திருந்தால் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. 

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், வழக்கம் போல "துப்பாக்கி" படமும் ரீமேக் படம் என்ற விமர்சனத்தை சந்தித்திருக்கும். ஏனென்றால், பின்னர் விஜய் நடிப்பில் வெளியான "கத்தி" திரைப்படமும் தெலுங்கு படத்தின் ரீமேக் என்ற விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.