நகைச்சுவை கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் வடிவேலு கடந்த 35 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையால் அனைவரையும் சிரிக்க வைத்து வருகிறார்.
இடையில் 2017 முதல் 5 ஆண்டுகள் வரை தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்பட்டிருந்த அவர், பின்னர் "நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்" படத்தின் மூலம் மீண்டும் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும், சமீபத்தில் வெளியான "மாமன்னன்" திரைப்படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்தார் வடிவேலு.
தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் "கேங்கர்ஸ்" மற்றும் மாரிசன் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் வடிவேலுவின் மகன் சுப்ரமணியனின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் சுப்ரமணியன் அச்சு அசல் அப்படியே தனது தந்தை வடிவேலு போலவே இருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர். வடிவேலுவின் உடல் அமைப்பும், முக சாயலும் அப்படியே அவரது மகனிடம் பிரதிபலிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். நகைச்சுவை மன்னன் வடிவேலுவின் மகனையும் ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.