குடி போதையில் தான் இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடுனேன் - நடிகை சோனா


பிரபல நடிகை சோனா சமீபத்தில் தன்னுடைய மதுப்பழக்கம் குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார். 

அவர் கூறியதாவது நான் அடிப்படையில் ஒரு கிறிஸ்தவர். இதனால் எங்கள் வீட்டில் எப்போதுமே ஒயின் குடிக்கும் கலாச்சாரம் இருந்தது. 

ஒயின் குடிப்பது என்றால் ஒருவர் இரண்டு பேர் கிடையாது கும்பலாக அமர்ந்து கொண்டு ஒயின் அருந்தி மகிழ்வார்கள், அந்த நேரத்தில் எனக்கும் கொடுத்தார்கள். இப்படித்தான் என்னுடைய மது பழக்கம் ஆரம்பமானது. 

ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது நன்றாக தூங்குவதற்காக மது பழக்கத்தை நான் ஆரம்பித்தேன். 

அதன் பிறகு கவர்ச்சியான பாடல்களில் கூச்சம் இல்லாமல் நடனம் ஆக வேண்டும் என்பதற்காக மது பழக்கத்திற்கு ஆளானேன். அந்த வகையில், முதன் முதலில் தெலுங்கு படம் ஒன்றில் நான் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தேன். 

அந்த பாடலில் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து கொண்டாட சொன்னார்கள். எனக்கு கூச்சமாக இருந்தது. அதனால், அந்த பாடல் படப்பிடிப்பு முடியும் வரை மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை மது குடித்துக் கொண்டே இருந்தேன். 

அதனால் மது போதையில் கூச்சம் இல்லாமல் நடனம் ஆடினேன் எனக் கூறியிருக்கிறார் நடிகை சோனா.அவர் மது போதையில் ஆடியதாக கூறப்படும் பாடல் காட்சியின் வீடியோ இதோ,

Post a Comment

Previous Post Next Post