சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை கௌரி கிஷன் ஆண் நண்பர்கள் தங்களுடைய பெண் நண்பர்களை செல்லப்பெயர்களில் அழைப்பது குறித்து தனது வெளிப்படையான கருத்தை பதிவு செய்துள்ளார்.
பெண்கள் ஆண்களை "செல்லமே, தங்கமே, பேபி" போன்ற வார்த்தைகளால் அழைப்பது சரியா? அவர்களுக்கு அப்படி அழைக்க உரிமை இருக்கிறதா? என்ற கேள்விக்கு கௌரி கிஷன் அளித்த பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இதற்கு பதிலளித்த கௌரி கிஷன், என்ன கேள்வி இது? இதில் என்ன தவறு இருக்கிறது? ஒருவர் என் மீது ஈர்ப்பு மற்றும் பாசத்துடன் ஏன் காதல் கூட கொண்டு இருக்கலாம். அவர் என்னை செல்லமே, தங்கமே, அன்பே, பேபி என்று அழைக்க ஆசைப்படுகிறார் என்றால் நான் ஏன் அதை தடுக்க வேண்டும்?
அவர் எந்த ஒரு தப்பான எண்ணமும் இல்லாமல் என்னை அப்படி அழைக்கிறார் என்றால் அதனை நான் என்ஜாய் செய்வேன்.
அதை விட்டுவிட்டு, என்னை அப்படி அழைக்காதே என்று நான் அவரிடம் சொன்னால், அது அவரை புண்படுத்தும் இல்லையா? இதில் எனக்கு எதுவும் பெரிய தவறு இருப்பதாக தெரியவில்லை. என கௌரி கிஷன் பதிலளித்தார்.
மேலும் அவர் பேசுகையில், "சில நேரங்களில் ஒருவேளை அவர்கள் மோசமான எண்ணத்துடன் இப்படியான வார்த்தைகளை உபயோகப்படுத்தினால், அது நமக்கு கண்டிப்பாக தெரிந்துவிடும். சாதாரணமாக செல்லமே, தங்கமே, பேபி என்று அழைக்கும்போது அதில் ஒன்றும் பெரிய பிரச்சனை இருப்பதாக எனக்கு தெரியவில்லை" என்று தனது கருத்தை அழுத்தமாக பதிவு செய்தார்.
கௌரி கிஷனின் இந்த பதிலுக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு சிலர் இது சரியான கருத்து என்றும், சிலர் இது தவறான கருத்து என்றும் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உங்கள் கருத்து என்ன? பெண்களை செல்லமே, தங்கமே, பேபி என ஆண்கள் அழைப்பது சரியா? உங்கள் கருத்துக்களை கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கலாம்.