வாழைக்காய் வச்சி பண்ணா நல்லா இருக்கும்.. டிக்டாக் இலக்கியா ஓப்பன் டாக்

டிக்டாக் செயலியின் மூலம் பிரபலமானவர் இலக்கியா. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அவர் பெற்றுள்ளார். சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்த இலக்கியா, "நீ சுடத்தான் வந்தீயா" என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். 

சினிமா வாய்ப்பு கொடுப்பதாக கூறி பலர் தன்னை ஏமாற்றியுள்ளதாக பலமுறை நேர்காணல்களில் அவர் வேதனையுடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகை இலக்கியா பிரபல யூடியூப் சேனலில் நடிகை ஷகீலா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

அப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல உருக்கமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். தனது அப்பா அம்மாவுக்கு மூன்று மகள்கள் என்றும், தான் மூன்றாவது படிக்கும்போது தனது அம்மா இறந்துவிட்டதாகவும் அவர் கூறினார். 

பின்னர் தான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது தனது அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார். அம்மா இருந்திருந்தால் தனது வாழ்க்கை, படிப்பு, திருமணம் என சீராக சென்றிருக்கும் என்றும், அம்மா இல்லாததால்தான் தனது வாழ்க்கை இப்படி மாறிவிட்டதாகவும் அவர் கண்ணீர் மல்க கூறினார். 

படிப்பதற்குக்கூட அப்பா எந்த உதவியும் செய்யவில்லை என்றும், வீட்டில் பிரச்சனைகள் இருந்ததால் கோயம்புத்தூரில் உள்ள பஞ்சு மில்லுக்கு வேலைக்கு சென்றதாகவும் இலக்கியா தெரிவித்தார். அதிக சம்பளம் கிடைக்கும் என்று சென்னைக்கு வந்ததாகவும், அப்போதுதான் டப்ஸ்மாஷ் வீடியோக்களை வெளியிட முடிவு செய்ததாகவும் அவர் கூறினார். 

கிளாமர் வீடியோ போட்டதால் லைக்ஸ் குவிந்ததாகவும், தனக்கென்று யாரும் இல்லை என்பதால் எப்படி வேண்டுமானாலும் வீடியோ பண்ணலாம் என கிளாமர் வீடியோக்களை பண்ணியதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இரட்டை அர்த்தம் கொண்ட பாடலுக்கு நடனம் ஆடியபோது, அந்த பாடலின் வரிகளுக்கு ஏற்ப கையில் வாழைக்காய் வைத்துக்கொண்டு நடித்தது பலரையும் கவர்ந்ததாகவும், அந்த வீடியோவுக்கு நிறைய லைக்ஸ் கிடைத்ததாகவும், ஃபாலோயர்ஸ் கிடுகிடுவென உயர்ந்ததாகவும் அவர் கூறினார். 

தனது கவர்ச்சியான வீடியோக்களால் டிக்டாக் தன்னை மூன்று முறை தடை செய்ததாகவும், வேறுவேறு ஐடிகளை பயன்படுத்தி மீண்டும் வீடியோக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

வீட்டில் அப்பாவை தவிர வேறு யாரிடமும் பேசுவதில்லை என்றும், சில நேரங்களில் தனிமையில் இருப்பதை நினைத்து தற்கொலை செய்து கொள்ளக்கூட தோன்றியிருக்கிறது என்றும் அவர் வேதனையுடன் கூறினார். கூட இருந்தவர்களே பல துரோகங்களை செய்திருப்பதாகவும், நிறைய ஏமாற்றப்பட்டிருப்பதாகவும் கூறி கண்ணீர்விட்டு அழுதார் இலக்கியா. 

பண்டிகை நாட்களில் தனிமையில் இருப்பதை நினைத்து அழுததாகவும் அவர் வேதனைப்பட்டார். இதையடுத்து நடிகை ஷகீலா, இலக்கியாவுக்கு ஆறுதல் கூறி, "உனக்காக நான் இருக்கிறேன், என் போன் நம்பரை வாங்கிக்கொள்" என்றார்.

படிக்கும்போது காதலித்ததாகவும், ஆனால் இப்போது யாரையும் காதலிக்கவில்லை என்றும், வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றியதால் இப்போது யாரிடமும் வாய்ப்பு கேட்டு செல்வதில்லை என்றும் இலக்கியா வேதனையுடன் தெரிவித்தார். 

டிக்டாக் இலக்கியாவின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், வீடியோக்களில் உடலை காண்பித்து கவர்ச்சி ஆட்டம் போடும் இலக்கியாவுக்குள் இவ்வளவு வலியா என கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். அவரது இந்த பேட்டி பலரையும் ஈர்த்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post