அந்த உணர்ச்சி எப்படி இருக்கும்னே எனக்கு தெரியாது..? ஒப்பனாக கூறிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது தனிமை குறித்த எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் தனிமையை விரும்பத் தொடங்கியதாகவும், அதை மிகவும் நேசிப்பதாகவும் அவர் கூறினார். 

அந்த பேட்டியில் ஐஸ்வர்யா மேலும் பேசியதாவது, "இந்த உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான மனிதன் யார் என்று கேட்டால், அது தனிமையில் இருக்கக்கூடிய மனிதன் தான். 

நிறைய பேர் என்னிடம் உங்களுக்கு போர் அடிச்சா என்ன பண்ணுவீங்க என்று கேட்பார்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் போர் அடிப்பது என்றால் என்ன என்று எனக்கு தெரியாது. 

அப்படி ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டது கிடையாது. அப்படி ஒரு உணர்வை இதுவரை நான் எதிர்கொண்டது கிடையாது. இப்போது நான் தனிமையில் தான் இருக்கிறேன். ஆனால் எனக்கு போர் அடித்ததே கிடையாது." 

தனிமையின் முக்கியத்துவத்தை பற்றி அவர் மேலும் கூறுகையில், "என்னைக் கேட்டால் ஆன்மீகத்தின் உச்சகட்ட படிநிலை என்றால், அது யார் ஒருவர் தான் தனியாக இருக்கும்போது தன்னை வலுவானவராக உணர்கிறாரோ அவர்தான் என்று கூறுவேன்" என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். 

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த கருத்துக்கள் தனிமையின் வலிமையையும், அதை நேர்மறையாக அணுகுவதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபலங்கள் பலரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் தனிமையை விரும்புவதாகவும், அது அவர்களுக்கு அமைதியையும், மன வலிமையையும் கொடுப்பதாகவும் அவ்வப்போது கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த வெளிப்படையான பேட்டி அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Post a Comment

Previous Post Next Post