தமிழக அரசியல் களத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அவர்களின் நகர்வு பொதுமக்களால் கூர்மையாக கவனிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாது என்ற கூற்றை அண்ணாமலை சுக்கு சுக்காக உடைத்து இருக்கிறார்.
அண்ணாமலையின் பின்னால் நாளுக்கு நாள் இளைஞர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருப்பதை கண்கூட பார்க்க முடிகிறது.
அதற்கு ஏற்றார் போல தன்னுடைய ஒவ்வொரு அரசியல் நகர்வையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார் அண்ணாமலை.
இந்நிலையில் தன்னுடைய twitter பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்று இணைய பக்கங்களில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் தமிழ்நாட்டில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே இருக்கிறது அதற்கு அடிப்படை காரணம் குடிப்பழக்கமாக இருக்கிறது அதனை கட்டுப்படுத்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். இந்த வீடியோவை அன்று என்ற தலைப்பின் கீழ் இணைத்திருக்கிறார் அண்ணாமலை.
அதனை தொடர்ந்து அமைச்சர் ரகுபதி பேசக்கூடிய காணொளியை இன்று என்ற தலைப்பின் கீழ் இனைத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, டாஸ்மாக்கால் ஒரு இளைஞன் உயிரிழந்தான் என்று எந்த கிராமத்திலாவது புகார் கொடுத்திருக்கிறார்களா..?
மது குடித்து இறப்பவர்களுக்கு அரசாங்கம் எப்படி பொறுப்பேற்க முடியும்..? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
இந்த இரண்டு வீடியோக்களையும் ஒப்பிட்டு ஒரே வீடியோவாக அண்ணாமலை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் காட்டு தீயாக பரவி வருகிறது.
ஆட்சிக்கு வருவதற்கு முன் பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு.
— K.Annamalai (@annamalai_k) March 17, 2025
திமுக கேடு தரும்! pic.twitter.com/I6NOoVpoeg