நடிகை நிகிலா விமல் வெற்றிவேல் திரைப்படத்தில் இடம் பெற்ற உன்னை போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல பாடலின் வெற்றி குறித்து தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
சமீபத்தில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் வெற்றிவேல் படத்தில் இடம்பெற்ற உன்னை போல ஒருத்தர நான் பாடல் பலரது விருப்பமான பாடலாக அமைந்திருக்கிறது.
அவர்களுடைய ப்ளே லிஸ்டில் முக்கியமான இடம் பெற்றிருக்கிறது. இந்த பாடலின் வெற்றி குறித்து உங்களுடைய அனுபவம் என்ன உங்களுடைய பார்வை என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகை நிகிலா விமல் நான் தமிழில் வெற்றிவேல், கிடாரி என இரண்டு திரைப்படங்கள் முடித்த பிறகு மலையாளம் படத்தில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கிறேன்.
அப்போது, அவர்களுக்கு நான் தமிழ் படங்களில் நடித்திருக்கிறேன் என்று தெரியும். ஆனால், எப்படியான படங்கள் என்று எதுவுமே அவர்களுக்கு தெரியாது.
ஒரு முறை மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்தது. அப்போது, என்னை பார்ப்பதற்கான ஒரு கூட்டம். எனக்கே வியப்பாக இருந்தது.
படக்குழுவில் இருந்த அனைவரும் தமிழ்நாட்டில் நீங்கள் இவ்வளவு பேமஸா..? என்று வியப்பாக கேட்டார்கள். எனக்கும் வியப்பாகத்தான் இருந்தது.
ஆனால், அவர்கள் கேட்டதெல்லாம் உன்னை போல ஒருத்தர நான் பார்த்ததில்லை பாட்டுல நீங்கதான வருவீங்க..? என்று கேட்டார்கள். அப்போதுதான் எனக்கு புரிந்தது. இங்கே நான் பிரபலம் கிடையாது இந்த பாடல் தான் பிரபலமானது. அதனால் தான் என்னை இத்தனை பேர் பார்க்க வந்திருக்கிறார்கள் என்று பல குழுவினரிடம் கூறினேன்.
எனக்கே ஒரு நிமிடம் அதிர்ச்சியாக இருந்தது. இத்தனை பேர் என்னை பார்க்க வந்திருக்கிறார்களா? என்று, என்னை விட அவர்கள் அந்த பாடலை தான் பெருசாக பார்கிறார்கள் என்று பதிவு செய்திருக்கிறார் நடிகை நிகிலா விமல்.