நடிகை பிரியங்கா மோகன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது, தனக்கு செல்லப்பெயர் இருப்பதை வெளிப்படுத்திய விதம் ரசிகர்களை கலகலக்க வைத்துள்ளது.
"உங்களுக்கு ஏதாவது செல்லப்பெயர் இருக்கிறதா?" என்ற கேள்விக்கு நடிகை பிரியங்கா மோகன் பதிலளிக்கையில், "பிங்க்ஸ் என்று என்னை அழைப்பார்கள்" என்று கூறிவிட்டு, "ஏன்டா இதை சொன்னோம்" என்பது போல வெட்கத்தில் நெளிந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள், "பாத்திங்களா செல்லத்துக்கு ஒண்ணுமே தெரியல.." என்று கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர். பிரியங்கா மோகன், தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார். சமீபகாலமாக இவர் கொடுக்கும் பேட்டிகள் மற்றும் அவரது க்யூட்டான நடவடிக்கைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரியங்கா மோகனிடம் அவரது செல்லப்பெயர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. சற்று தயங்கிய பிரியங்கா மோகன், "பிங்க்ஸ் என்று என்னை கூப்பிடுவாங்க" என்று கூறினார்.
சொல்லிவிட்டு ஏதோ தவறு செய்துவிட்டது போல சிரித்து நாணத்தில் நெளிய ஆரம்பித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், "எதனால என்னை அப்படி கூப்பிடுறாங்கன்னு எனக்கு தெரியல.
வித்தியாசமான செல்லப்பெயர் இது" என்று கூறி மீண்டும் வெட்கத்தில் நெளிந்தார். பிரியங்கா மோகனின் இந்த க்யூட் ரியாக்ஷன் வீடியோவாக இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிரியங்கா மோகனின் வெட்கத்தை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர். அவரது க்யூட்னஸ்ஸை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள், அதே நேரத்தில் அவரை கலாய்க்கவும் தவறவில்லை.
"செல்லத்துக்கு செல்லப்பேர் வச்சிருக்காங்க, ஆனா அதுக்கே வெட்கப்படுது", "பாத்திங்களா செல்லத்துக்கு ஒண்ணுமே தெரியல..", "பிங்க்ஸ்... சூப்பர் பேரு", "இவ்வளவு க்யூட்டா இருக்கீங்களே" என்பது போன்ற கமெண்ட்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், பலர் ஹார்ட் மற்றும் லவ் எமோஜிகளை கமெண்ட் செக்ஷனில் தெறிக்கவிட்டு பிரியங்கா மோகனுக்கு தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பிரியங்கா மோகன் சொல்லும் போது நெளிந்தாலும் "பிங்க்ஸ்" என்ற செல்லப்பெயர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வீடியோ வைரலாக பரவுவதை தொடர்ந்து, "பிங்க்ஸ்" என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
மொத்தத்தில் பிரியங்கா மோகனின் இந்த க்யூட் செல்லப்பெயர் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.